நாள் - 14.09.2023 - வியாழன் கிழமை


நல்ல நேரம்:


காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை


இராகு:


பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை


குளிகை:


காலை 9.00 மணி முதல்  காலை 10.30 மணி வரை


எமகண்டம்:


காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை


சூலம் - தெற்கு


மேஷம்


மகன்/ மகள்கள் மூலம் வரவுகள் ஏற்படும். கொடுக்கல் வாங்கள் ஷயத்தில் சிந்தித்துச் செயல்பட வேண்டும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் நல்லது நடக்கும். இன்றைய நாளில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். கற்பனை தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உங்கள் குடும்பங்கள் அல்லது நன்பர்களுடன் சுற்றுலா செல்வது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். இவர்களுடன் பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவங்கள் ஏற்படும மன திருப்தி அடையும்.  ஆகவே இன்றைய நாள் வெற்றி நிறைந்த நாளாக உங்களுக்கு அமையும்.


ரிஷபம்


தாய்வழி உறவினர்களால் அலைச்சல்கள் ஏற்படும். மகன்/மகளிகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்துவந்த போட்டிகள் குறையும். உறவினர்கள் அல்லது அலுவலகத்தில் நீண்ட நாட்களாக கசிந்த வீண் வதந்திகள் நீங்கும். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும் சாதகமாகவே முடியும்.  படிப்பு சம்மந்தமான சிந்தனைகள் மாணவர்களுக்கு அதிகரிக்கும்.  அலுவலகத்தில் சக ஊழியர்களால் நல்லது கிடைக்கும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.  ரிஷப ராசிகாரர்களுக்கு நட்பு நிறைந்த நாளாக இருக்கும்.


மிதுனம்


மனதளவில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். நினைத்த காரியங்களை இன்றைய நாளில் செய்து முடிப்பீர்கள்.  உங்கள் பணிகளில் பதவி உயர்வு உண்டாகும். சவாலான வேலைகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளுடன் கலந்து பேசி சில முடிவுகளை எடுப்பீர்கள். புதிய தொழில்நுட்ப கருவிகள் மீதான விருப்பம் அதிகரிக்கும். இன்றைய நாள் உயர்வாக உங்களுக்கு இருக்கும்.


கடகம்:


கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மனதில் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகத்தால் பலன் கிடைக்கும். உடலில் இருந்துவந்த சோர்வு படிப்படியாகக் குறைந்து சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உங்களின் பேச்சுக்கு குடும்பம் அல்லது அலுவலகத்தில் மதிப்பு அதிகரித்து பாராட்டுகளை பெறுவீர்கள். தற்பெருமை தொடர்பான சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. ஆகவே சுகம் நிறைந்த நாளாக இன்று இருக்கும்.


சிம்மம்


இன்றைய நாளில் சகோதரர்/சகோதரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. மனதில் அவ்வப்போது சலனங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் விடாப்பிடியாகச் செயல்பட்டு நினைத்ததை செய்து முடிப்பீர்கள். உள்ளூரில் பயணம் மேற்கொள்வதால் பயன் கிடைக்கும். அனைத்து விவகாரங்களிலும் கோபப்படாமல் பொறுமையாக இருப்பது அவசியம். குடும்ப உறுப்பினர்கள் மூலம் எதிர்பார்த்த சில உதவிகள் நன்றாக அமையும். எனவே, குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மூலம் உங்கள் ஆதரவு கிடைக்கும். 


கன்னி


உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும்.  வாங்கிய கடன்களை அடைப்பீர்கள். வாக்கு சாதுரியத்தின் மூலம் தடைபட்ட சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். வியாபார பணிகளில் புதிய அனுபவம் கிடைப்பதோடு, லாபமும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சில செலவுகளால் அலைச்சல்கள் உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.


துலாம்


எதிர்காலத்திற்கான சேமிப்பு கணக்கு அல்லது நகைகளை வாங்கி சேமிப்பீர்கள். சகோதர, சகோதரிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்கள் துறைகளில் சில நுட்பங்களைப் புரிந்து கொள்வீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சபை நிமிர்த்தமான பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.


விருச்சிகம்


நண்பர்களிடத்தில் நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். நண்பர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.  இதனால் வாங்கி கடனை கூட அடைக்க வாய்ப்பிருக்கிறது. வியாபாரமும் நன்றாக இருக்கும். போட்டிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். போட்டிகள் தொடர்பாக புதிய சிந்தனைகள் வரும். நிர்வாக செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படுதல் அவசியமாகும். மனைவி அல்லது கணவர் வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.


தனுசு


தந்தையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தந்தையின் உடல் நலத்தில் அக்கறையாக இருக்க வேண்டும். நண்பர்களின் உதவி மூலம் நல்லது கிடைக்கும். வியாபார பணிகளில் அனுபவம் மேம்படும்.  நினைத்த காரியங்கள் சாதகமாக முடியும். வாகனத்தைச் சீர் செய்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பள்ளி மாணவர்களுக்கு அனுபவம் கிடைத்ததோடு பாராட்டுகளை பெறுவீர்கள். கோயில்கள் அல்லது ஆன்மீக பயணங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டாகும். அமைதி நிறைந்த நாளாக அமையும்.


மகரம்


கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உடனிருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மனதில் இனம்புரியாத குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் விற்பனை மந்தமாக இருக்கும். எதிலும் நிதானமாகச் செயல்படவும். மற்றவர்களுடன் பேசும் போது பொறுமையைக் கடைபிடிக்கவும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.


கும்பம்


உறவினர்களிடம் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்குப் புதுவிதமான நம்பிக்கையை ஏற்படுத்தும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். மனை நிமிர்த்தமான செயல்பாடுகளின் மூலம் லாபம் ஏற்படும். ஆசை மேம்படும் நாள்.


மீனம்


நீண்ட நாட்களாக இருந்து வந்த சொத்து பிரச்சனைகளுக்கு  முடிவு கிடைக்கும். நிதானமாக பல முறை யோசித்து அலவலகங்களில் பேச  வேண்டும். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். நண்பர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மனதளவில் புதிய உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். நீண்ட நாட்களாக நீங்கள் முயற்சித்த விஷயங்களில் வெற்றி உண்டாகும். எதிர்பார்த்திருந்த சில கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். கீர்த்தி நிறைந்த நாள்.