ஏப்ரல் மாதத்தின் முதல் வாரமான இன்று மட்டும் 12 புதுப்படங்கள் ரிலீசாகியுள்ளது. நேற்று ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த கள்வன் படம் வெளியாகியிருந்தது.


இரவின் கண்கள் 


பிரதாப் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் “இரவின் கண்கள்”. இந்த படத்தில் பாப் சுரேஷ், டோலி ஐஸ்வர்யா, கிரி துவாரகேஷ், செல்வா, அழகுராஜா, குமரன், தண்டபானி என பலரும் நடித்துள்ளனர். பாப் சுரேஷ் தான் இப்படத்தை இயக்கியுள்ள நிலையில் கீதா கரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். சார்லஸ் தனா இசையமைத்துள்ளார். இந்த படம் செயற்கை நுண்ணறிவு கருவிக்கும், மனிதர்களுக்கும் இருக்கும் தொடர்பை குறிக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமாக உருவாக உள்ளது. 


ஆலகலாம் 


அறிமுக இயக்குநர் ஜெயகிருஷ்ணா இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள படம் “ஆலகலாம்”. இந்த படத்தில் ஹீரோயினாக சாந்தினி நடித்துள்ளார். மேலும் ஈஸ்வரி ராவ், தீபா, பாபா பாஸ்கர், தங்கதுரை, சிசர் மனோகர் என பல நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர். ஸ்ரீஜெய் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார். காதலும் பாசமும் நிறைந்த குடும்பப்படமாக ஆலகலாம் உருவாகியுள்ளது. 


ஒரு தவறு செய்தால் 


மணி தாமோதரன் இயக்கியுள்ள “ஒரு தவறு செய்தால்” படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், உபசனா, நமோ நாராயணன் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். கே.எம்.ராயன் இசையமைத்துள்ள இப்படமானது சமூகத்தில் நடந்து வரும் அவலங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. 


பேமிலி ஸ்டார்


விஜய் தேவரகொண்டா, மிருனாள் தாக்கூர் நடிப்பில் உருவாகியுள்ள பேமிலி ஸ்டார் படத்தை பரசுராம் பெட்லா இயக்கியுள்ளார். கோபி சுந்தர் இசையமைத்திருக்கும் இப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகும் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.


டபுள் டக்கர்


மீரா மஹதி இயக்கியுள்ள டபுள் டக்கர் படத்தில் தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர் என பலரும் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் முதல்முறையாக புதிதாக வடிமைக்கப்பட்ட அனிமேஷன் கேரக்டரும் படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்துள்ள நிலையில் ஏர் ஃபிளிக் நிறுவனம் தயாரித்துள்ளது. 


வல்லவன் வகுத்ததடா


விநாயக் துரை ஃபோகஸ் ஸ்டூடியோஸ் சார்பில் தயாரித்து இயக்கியுள்ள படம் “வல்லவன் வகுத்ததடா”. ஹைப்பர் லிங் கதையில் க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இப்படம் 5 கேரக்டர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தேஜ் சரண்ராஜ், ராஜேஷ், பாலசந்திரன், அனன்யா, ஸ்வாதி மீனாட்சி என பலரும் நடித்துள்ளனர். 


ஒயிட் ரோஸ்


அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் கயல் ஆனந்தி நடித்துள்ள படம் ‘ஒயிட் ரோஸ்’. இந்த படத்தில் ஆர்.கே.சுரேஷ், விஜித், ரூசோ ஸ்ரீதரன், கணேஷ், ராமநாதன் என பலரும் நடிக்க, பூம்பாரை முருகன் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கிறது. 


இதனை தவிர ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த கள்வன் படம் நேற்று வெளியானது.  மேலும் the first oman (ஆங்கிலம்), கற்பு பூமியில் சில கருப்பு ஆடுகள், one life (ஆங்கிலம்), அறிவியல், City hunder the movie: Angel Dust (ஜப்பானிய படம்) இன்று வெளியாகியுள்ளது.