பிரபல நடிகை மீரா ஜாஸ்மினின் தந்தை உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மீரா ஜாஸ்மின் 


கேரளாவை சேர்ந்த நடிகை மீரா ஜாஸ்மின் 2001 ஆம் ஆண்டு வெளியான சூத்திரதாரன் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இவரை தமிழில் இயக்குனர் லிங்குசாமி தனிய ரன் படத்தின் மூலம் என்ட்ரி கொடுக்க செய்தார். அப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் மீரா ஜாஸ்மின் தமிழ் ரசிகர்களால் நன்கு அறியப்பட்டார். 


தொடர்ந்து தமிழில் பாலா, புதிய கீதை, ஆஞ்சநேயா, ஜூட், சண்டக்கோழி, ஆயுத எழுத்து, கஸ்தூரிமான், மெர்குரி பூக்கள், திருமகன், பரட்டை என்கிற அழகுசுந்தரம், நேபாளி, மரியாதை, சிவப்பு மழை ,பெண் சிங்கம், இளைஞன், மம்மட்டியான், இங்க என்ன சொல்லுது, விஞ்ஞானி உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். 


மீண்டும் ரீ-எண்ட்ரீ


அதே சமயம் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆகிய மொழிகளிலும் இவர் பிரபல நடிகையாக வலம் வருகிறார். மீரா ஜாஸ்மின் 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழில் பெரிதாக எந்த படத்தில் நடிக்கவில்லை. துபாயில் பொறியாளராக பணியாற்றி வரும் ஜான் டிட்டுஸ் என்பவருடன் அவருக்கு திருமணம் நடைபெற்றது. மீண்டும் அவருக்கு 2022 ஆம் ஆண்டு முதல் வாய்ப்பு வர தொடங்கியுள்ளது. குடும்பப்பாங்கான கேரக்டரில் நடித்து வந்த மீரா ஜாஸ்மின் கடந்த இரண்டு ஆண்டுகளாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார். நினைத்தது போலவே அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.






தந்தை மரணம்


இந்த நிலையில் மீரா ஜாஸ்மின் தந்தை ஜோசப் பிலிப் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். 83 வயதான அவர் எர்ணாகுளத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் மீரா ஜாஸ்மின் தந்தையின் மறைவுக்கு தமிழ் மலையாள திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் தந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டால் பக்கத்தில் வெளியிட்டுள்ள மீரா ஜாஸ்மின் மீண்டும் நாம் சந்திக்கும் வரை இந்த புகைப்படங்கள் நினைவில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.