பாக்கியராஜ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மௌன கீதங்கள். இந்த படத்தில் பாக்கியராஜுக்கு ஜோடியாக சரிதா நடித்திருந்தார். கணவனின் தவறான நடத்தையால் , அவரை விட்டு விவாகரத்தாகி பிரிந்து போகும் நாயகி , இவர்களுக்கு பிறக்கும் குழந்தை ,விவாகரத்திற்கு பிறகு எப்படி மீண்டும் இணைந்தார்கள் என்பதை சுவாரஸ்யமாக படமாக்கியிருப்பார் இயக்குநர் பாக்கியராஜ். இந்த படம் அந்த காலக்கட்டத்தில் சூப்பர் டூப்பர் வெற்றியடைந்தது. இந்நிலையில் நடிகர் பாக்கியராஜ் இது குறித்து மேடை ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.
அதில் ”மௌன கீதங்கள் படம் பார்த்துட்டு , விவாகரத்தான இரண்டு மூன்று ஜோடிகள் என்னை வந்து பார்த்தாங்க. அந்த படத்தை பார்த்த பிறகுதான் நாங்க மீண்டும் சேர்ந்தோம் , அதை பார்த்துட்டுதான் நாங்க மாறினோம் . சொல்லிட்டு போகலாம்னுதான் வந்தோம்னு சொன்னாங்க. உண்மையிலேயே அந்த படம் எடுத்ததன் தாக்கம் இந்த அளவு இருக்கும்னு நான் நினைக்கல. அந்த படத்துல இன்னொரு பாதிப்பு இருக்கு. அந்த படத்துல நான் தப்பு பண்ணியிருப்பேன். பொண்டாட்டி இருக்கும் பொழுது அதை விட்டுட்டு இன்னொரு பொண்ணோட சகவாசம் வச்சிருப்பேன். நியாயமா என்னைத்தான் எல்லோரும் திட்டனும் . ஆனால் சரிதாவைத்தான் எல்லோரும் திட்டிக்கிட்டு இருப்பாங்க. ஏதோ ஒரு தடவை தப்பா போயிட்டான் அதுக்காக இந்த பொண்ணு இப்படி பண்ணுறாளேனு சொன்னாங்க. குறிப்பா பெண்கள் சொன்னாங்க. நியாயமா அவங்க அப்படி ஒப்புக்கொள்ள மாட்டாங்க. படம் அப்படி அமைந்ததால இது மாதிரி மாறிப்போச்சு “ என்றார் பாக்கியராஜ்.
Juicemac : டாஸ்மாக்கிற்கு போட்டியாக ஆரம்பித்த ஜூஸ்மாக்... அடுத்தடுத்த கிளைகளோடு சாதிக்கும் சதீஷ்!