தமிழின் உச்ச நடிகர் ரஜினிகாந்த் மிகவும் வெளிப்படையாக பேசும் பழக்கம் கொண்டவர். அவர் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டிருப்பதாலும், சாதாரண மனிதராக இருந்து மேலே வந்தவர் என்னும் அனுபவம் காரணமாகவும் அவரிடம் இருந்து வரும் அறிவுரைகளை பலர் பின்தொடர்வதுண்டு. அவர் செய்த தவறுகளை அவரே ஒப்புக்கொண்டுள்ள சம்பவங்கள் பல உண்டு. அதுபோல அவரது உடல் நிலை அடிக்கடி பிரச்சனை ஏற்படுவதற்கு என்ன காரணம் என்று முன்பு ஒரு மேடையில் கூறி உள்ளார்.
அவர் பேசுகையில், "நான் நிறைய கெட்ட நண்பர்களுடன் பழகி, குடி பழக்கத்திற்கு ஆளாகி, அதுக்கு அப்புறம் படமெல்லாம் நடிச்சு அதுல நெறைய காசு வந்ததும் இன்னும் அதிகமா குடி பழக்கம் அதிகரிச்சுது. அதுக்கப்புறம் கல்யாணம் ஆன பிறகு, என் மனைவி லதாவுக்காக அதையெல்லாம் ரொம்ப கொறச்சிக்கிட்டேன். சுத்தமா விட்டேன்ன்னு பொய் சொல்ல மாட்டேன், அனா நல்லா குறைச்சுட்டேன்.
அதுக்கப்பபுறம் தண்ணி இல்லாமலே தூங்க முடியும்ன்னு உடம்ப பழக்கி, யோகா எல்லாம் செஞ்சி, தண்ணிய விட்டுட்டேன். ஆனா சிகரெட்ட மட்டும் என்னால விடவே முடியல. என்னுடைய உடல்நலம் இந்த அளவுக்கு மோசமனதுக்கு காரணம் சிகரெட்தான். நான் அனுபவிச்சு சொல்றேன், அடிபட்டு சொல்றேன், சிகரெட்ட மட்டும் விட்ருங்க. நான் ராமச்சந்திரா மருத்துவமனைல இருந்தப்போ எனக்கு லங்ஸ்க்கு ட்ரீட்மெண்ட் பண்ணிட்டு இருக்காங்க. ஆனா எனக்கு கிட்னியையும் இது பாதிச்சுருக்கு. அது தெரிஞ்சதுக்கு அப்புறம்தான் சிங்கப்பூர் போக வேண்டிய நிலமை வந்தது.
அங்க போனாலும் அவங்க கொடுக்குற ஸ்டெராய்டு அவ்வளவு பவர்ஃபுல்லா இருக்கும். அதுக்கு மேல அந்த மருந்தெல்லாம் உடம்புல ரியாக்ட் செய்யணும். அதுக்கான சாத்தியக்கூறுகள் என் உடம்புல கம்மியா இருந்துது இந்த சிகரெட்டால. ஆனா அதையும் மீறி உடல் அந்த மருந்துகளை ஏத்துக்கிட்டதுல மறுத்துவர்களுக்கே பெரிய ஆச்சர்யம். அதுக்கெல்லாம் காரணம் நீங்களும், உங்களுடைய பிராத்தனையும், உங்களுடைய அன்பும்தான்."என்று பேசினார்.
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பது உறுதியான நிலையில், இயக்குநர் யார் என்கிற கேள்வி விஸ்வரூபம் எடுத்தது. தேசிங் பெரியசாமி, கார்த்திக் சுப்புராஜ், பாண்டிராஜ் உள்ளிட்ட பல பெயர்கள் அடிபட்டது. ஆனால், கடைசியாக விஜய் நெல்சனிடம் ரஜினி சாருக்கு ஒரு கதை சொல்லி பாருங்க என சொன்னதும், நெல்சன் சொன்ன கதை பிடித்துப் போக தலைவர் 169 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. பீஸ்ட் படத்தை பார்த்த ரஜினிகாந்த் அந்த படத்தை பாராட்டியதாக தகவல்கள் வெளியாகாத நிலையில், தலைவர் 169 படத்தின் இயக்குநரையே ரஜினிகாந்த் மாற்ற முடிவு செய்து விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வந்து தலைவர் 169 படத்தை நெல்சன் தான் இயக்கப் போகிறார் என்பது உறுதி ஆகி உள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார் என்பது அனைவரும் ஏற்கனவே அறிந்த ஒன்றுதான். இதில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக தகவல்கள் வந்தன, ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்ச்சர்ஸ் வெளியிடவில்லை.