திருத்தணியில் பட்டாகத்தியை வைத்து ரயிலில் ரீல்ஸ் எடுத்துவந்த நான்கு சிறுவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளரை கொடூரமாக தாக்கியுள்ள நிகழ்வு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரியவில் பேசுபொருளாகியுள்ளது. இளைஞர்கள் இடையே போதைப்பொருட்கள் மற்றும் ஆயுத பயன்பாடு அதிகரித்து வரும் சூழல் குறித்து  பலரும் அரசு மற்றும் காவல்துறையை விமர்சித்து வருகிறார்கள்  அதே நேரம் வன்முறையை திரைப்படங்களில் மிகைப்படுத்தி காட்டுவதாக திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

Continues below advertisement

வடமாநில தொழிலாளி மீது கொடூர தாக்குதல்  

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ரயிலில் நான்கு சிறுவர்கள் பட்டாகத்தியை வைத்து ரீல்ஸ் எடுத்துள்ளார்கள். அப்போது அதே ரயிலில் பயணித்த வடமாநில தொழிலாளர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சிராஜ் மீது கத்தி வைத்து ரீல்ஸ் எடுத்துள்ளார்கள் . ஒருகட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த சிராஜ் சிறுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சிராஜை திருத்தனி ரயில் நிலையத்தில் இறக்கி மறைவான இடத்திற்கு அழைத்து சென்ற நான்கு பேரும் அவரை பட்டா கத்தி மற்றும் கட்டையால் தாக்கி அதனை வீடியோவாகவும் பதிவு செய்தனர். சிராஜை கொடூரமாக நான்கு சிறுவர்களும் தாக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது 

நான்கு சிறுவர்கள் கைது

விசாரணையில் இந்த நான்கு சிறுவர்களும் திருவலங்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவர அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. சிறுவர்கள் கஞ்சா போதையில் இந்த கொடூர செயலை செய்ததாக அங்குள்ள மக்கள் கூறியுள்ளார்கள். 

Continues below advertisement

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிராஜ்

பலமான காயங்களுடன் மீடக்கபட்ட சிராஜ் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.

யார் காரணம் ?

வடமாநில இளைஞரை நான்கு சிறுவர்கள் தாக்கியுள்ள இந்த வீடியோ பார்ப்பவருக்கு அந்த சிறுவர்களின் மனநிலை என்னவாக இருந்திருக்கும் என்கிற கேள்வி நிச்சயம் எழும். பட்டா கத்தியை வைத்துக்கொண்டு அடையாள பெருமிதம் பேசும் பாடலுக்கு அவர்கள் ரீல்ஸ் செய்துகொண்டிருந்தனர். சிராஜை கொடூரமாக தாக்கி அதை வீடியோ எடுத்தது மட்டுமில்லாமல் கடைசியாக வெட்டிய சிறுவன் வெற்றி சின்ன காட்டுகிறான். இந்த காட்சிகல் பார்ப்பவரை மிகுந்த அச்சத்திற்கு உள்ளாக்குபவை. 

திரைப்படங்கள் ஒரு காரணமா

திருத்தணி சம்பவம் திரைப்பட இயக்குநர்கள் மீதும் எதிரொலித்துள்ளது. வன்முறை கலாச்சாரத்தை திரைப்படங்களில் மிகைப்படுத்தி காட்டுவது , ரவுடிகளின் வாழ்க்கையை படமாக்குவது போன்றவை இந்த இளைஞர்களின் கொடூர செயலுக்கு ஒரு காரணமென சமூக வலைதளங்களில் பலரும் கூறி வருகிறார்கள். குறிப்பாக திரைப்பட வெற்றிமாறன் மீது சில கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். தற்போது சிலம்பரசன் வைத்து அவர் இயக்கி வரும் அரசன் திரைப்படமும் வடசென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி ஒருவரிம் வாழ்க்கையைத் தழுவி உருவாகி வருகிறது. இதனால் இந்த  படத்திற்கும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.