தங்கம், வெள்ளி விலை குறைந்தது

தங்க நகை மீது இந்திய மக்களுக்கு அதிகளவு ஈர்ப்பு உள்ளது. குறிப்பாக விஷேச நாட்கள், திருமண நிகழ்வுகளில் தங்க நகைகள் முக்கிய பங்கு வகிக்கும். இதற்காகவே அதிகளவு தங்கத்தை மக்கள் வாங்கி சேமித்து வருகிறார்கள். அதிலும் தங்கமானது ஆபத்திற்கு கை கொடுக்கும் அட்ஷய பாத்திரமாக உள்ளது. அவசர தேவையாக உள்ள மருத்துவ செலவு, கல்வி செலவிற்கு உடனடியாக நகைகள் விற்றோ, அடகு வைத்தோ  பணத்தை பெற முடியும். ஆனால் நிலத்தில் முதலீடு செய்வதால் அவசர தேவைக்கு பணத்தை பெற இயலாது. இதன் காரணமாகவே தங்கத்தில் அதிக முதலீடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Continues below advertisement

தங்கத்தின் விலை கடந்த ஒரு வருட காலத்தில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் தங்கத்தின் விலை 59ஆயிரம் ரூபாயை எட்டிய நிலையில், ஒரே வருடத்தில் 1லட்சம் ரூபாயை தாண்டியது. 2026ஆம் ஆண்டு 2 லட்சம் ரூபாயை தொடும் என பொருளாதார ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இதன் காரணமாக தங்க நகைகளை தற்போதே வாங்கி வைத்தால் லாபம் என்ற நோக்கோடு ஏராளமான மக்கள் முதலீடு செய்ய தொடங்கினார்கள். இதே போல எப்போதும் இல்லாத வகையில் வெள்ளியிலும் முதலீடு அதிகளவில் செய்யப்பட்டது. தினந்தோறும் வெள்ளியின் விலையும் கிலோவிற்கு 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்றும் இன்றும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சரிந்துள்ளது. 

இன்றைய தங்கம் விலை என்ன.?

இன்று ஒரு கிராம் தங்கம் 420 ரூபாய் குறைந்து 12,600 ரூபாய்க்கு விற்பனையாகிறது.  சவரன் ஒன்றுக்கு 3,360 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Continues below advertisement

வெள்ளி விலையும்  கிலோவிற்கு 27ஆயிரம் குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 23 ரூபாய் குறைந்து 258 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை 2லட்சத்து 58ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்க நகைகளின் விலை குறைந்ததால் புத்தாண்டையொட்டி மக்கள் நகைகடைகளில் முற்றுகையிட தொடங்கியுள்ளனர்.