தனுஷ்நடிப்பில்வெளியான "யாரடிநீமோகினி", "உத்தமபுத்திரன்", "குட்டி" உள்ளிட்டபடங்களைஇயக்கியமித்ரன்ஆர்.ஜவஹர்  4வதுமுறையாகஅவருடன்இணைந்துள்ளபடம்திருச்சிற்றம்பலம்”. இந்தபடத்தைதனுஷின்படிக்காதவன், மாப்பிள்ளைபடங்களைதொடர்ந்து 3வதுமுறையாகசன்பிக்சர்ஸ்நிறுவனம்தயாரிக்கிறது

இப்படத்தில்நடிகைகள்நித்யாமேனன், பிரியாபவானிஷங்கர்,ராஷிகண்ணா, நடிகர்கள்பிரகாஷ்ராஜ், இயக்குனர்பாரதிராஜாஆகியோர்முக்கியகதாபாத்திரத்தில்நடிக்கஅனிருத்இப்படத்திற்குஇசையமைத்துள்ளார். இப்படத்தின்ட்ரைலர்அண்மையில்வெளியாகிரசிகர்களிடம்நல்லவரவேற்பைபெற்றநிலையில்கடந்தஆகஸ்ட் 18 ஆம்தேதிதிருச்சிற்றம்பலம்படம்வெளியானது

ஃபீல்குட்படமாகவெளியானஇந்தப்படம்ரசிகர்கள்மத்தியில்நல்லவரவேற்பைபெற்றுவருகிறது. படம்குறித்தானவிமர்சனங்களும்பாசிட்டிவாகவெளியானதால்அடுத்தடுத்தநாட்களில்தியேட்டருக்குரசிகர்கள்குடும்பம்குடும்பமாகசெல்லஆரம்பித்தனர். இதனால்படத்தின்வசூலும்அதிகமாகதொடங்கியது.

 

எதிர்பார்த்ததை விட படம் சிறப்பாக இருப்பதாகவும், நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு ஃபீல் குட் மூவி  பார்த்த அனுபவம் ஏற்பட்டதாகவும் ரசிகர்கள், பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் திரையிட்ட இடங்களில் எல்லாம் நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. படம் வெளியாகி 5 நாட்கள் முடிந்துள்ள நிலையில்  திருச்சிற்றம்பலம் திரைப்படம் உலக அளவில் 50 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் 43.74 கோடி வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது.