ஆக் ஷன், திரில்லர் போன்ற சீரியஸ் திரைப்படங்கள் ஒரு புறம் ரசிகர்களை கவர்ந்தாலும் குடும்ப கதைகள், அமைதியான காதல் கதை போன்ற அமைதியான படங்களையும் ரசிகர்கள் விரும்புவார்கள் என்பதை நிரூபித்து காட்டியுள்ளது சமீபத்தில் வெளியான "திருச்சிற்றம்பலம்" திரைப்படம். 


மேஜிக் கூட்டணி:


நடிகர் தனுஷ் - இயக்குனர் மித்ரன் ஜவஹர் கூட்டணியில் சூப்பர் ஹிட் திரைப்படமாக அமைத்த "யாரடி நீ மோகினி" மேஜிக் நிச்சயம் இந்த படத்திலும் அமைந்ததுள்ளது என்பது பிளஸ் பாயிண்ட். சராசரியான ஒரு குடும்பத்தில் இருக்கும் அன்பு, பாசம், ரொமான்டிக் காதல், நட்பு என அனைத்தையும் முழுமையாக படம் ஆக்ரமித்ததால் படம் ரசிகர்கள் மனதையும் எளிதில் கவந்து விட்டது. 



பிளாக் பஸ்டர் வெற்றி:


திரையரங்குகளில் வெளியான முதல் நாள் "திருச்சிற்றம்பலம்" படம் பல தரப்பட்ட விமர்சனங்களை பெற்றாலும் ரிலீசான மூன்றே நாட்களில் 50 கோடிக்கும் மேல் வசூலித்து கமர்ஸியல் ரீதியாக நல்ல வசூலை ஈட்டியுள்ளது. நாளுக்கு நாள் படத்தின் கலெக்ஷன் அதிகரித்து கொண்டே போகிறது. பாக்ஸ் ஆபிஸில் இது ஒரு பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து பெற்று வருகிறது. "திருச்சிற்றம்பலம்" படக்குழுவினர் தங்களது வெற்றியை கொண்டாடும் விதமாக தங்களது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் போஸ்டர் ஒன்றை பதிவிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளது.  


 






ஜாலியான ரொமான்டிக் படம் :
   
நடிகர் தனுஷ் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு விருந்தாக அமைந்துள்ளது. வெகு நாட்களுக்கு பிறகு மிகவும் எதார்த்தமான ஒரு ஜாலியான படத்தில் நடிகர் தனுஷ் நடித்தது அவரின் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் நடித்திருந்த இயக்குனர் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா என அனைவரின் நடிப்பும் பிரமாதம். கதை மற்றும் வசனங்கள் படத்தின் பக்கபலமாக அமைந்துள்ளது.  


குடும்ப படம் - பாசிட்டிவ் விமர்சனம் :


திரையரங்குகளில் குடும்பமாக வந்து படத்தை எந்த முக சுழிப்பும் இல்லாமல் ரசித்து வருகிறார்கள் ரசிகர்கள். நல்ல பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் "திருச்சிற்றம்பலம்" திரைப்படம் நிச்சயமாக மேலும் அதிக அளவிலான வசூலை வாரி குவிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.