தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் 4வது முறையாக அவருடன் இணைந்துள்ள படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தை தனுஷின் படிக்காதவன், மாப்பிள்ளை படங்களை தொடர்ந்து 3வது முறையாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகைகள் நித்யாமேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷிகண்ணா, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார். கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் - அனிருத் கூட்டணி இணைந்துள்ளதால் திருச்சிற்றம்பலம் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில், திருச்சிற்றம்பலம் திரைப்படம் சென்னையில் 82 திரையரங்குகளில் 598 சிறப்புக் காட்சிகளுடன் வெளியானது. கிட்டதட்ட ஓராண்டுக்குப் பின் தனுஷ் படம் தியேட்டர்களில் வெளியானதால் ரசிகர்கள் திரையரங்குகள் முன்பு வெடி வெடித்து கொண்டாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த திரைப்படத்தை பார்த்த ஒரு சிலர், “படம் நல்லா இருக்கு சார், தனுஷின் நடிப்பு வழக்கம்போல் தாறுமாறாக உள்ளது. வேலையில்லா பட்டதாரி படத்தில் வரும் ரகுவரன் கதாப்பாத்திரம் போன்று இந்த படத்திலும் திருச்சிற்றம்பலம் கதாப்பாத்திரம் வலுவாக இருக்கிறது” என்று தெரிவித்தனர். படம் வெளியானது முதல் ரசிகர்கள் கொண்டாடிய தருணங்களை கீழே காணலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும், ஏபிபி ஆப்பிலும் பின் தொடரலாம்.