சினிமா என்பது ஒரு மாயாபசார் என்பது பலரின் பொதுவான கருத்து. பேருந்து நடத்துனரும் இன்று பார்போற்றும் சூப்பர் ஸ்டாராக மாற முடியும் என்றால் அது சினிமாவால் சாத்தியம் என்பது குறிப்பிடத்தக்கது. திறமை என்ற ஒற்றை சொல்லே இந்த மாயஉலகில் ஜெயிக்க போதுமானது என்பதை நிரூபித்த மக்கள் பலர். அந்த வரிசையில் தனது உருவத்தாலும் நிறத்தாலும் பல கேலிகளுக்கு உள்ளான ஒரு நடிகை இன்று தனது திறமையால் மக்களின் மனதை வென்று சாதித்துக்காட்டியுள்ளார். தீபா சங்கர், இந்த பெயரை கேள்விப்படாத தமிழ் மக்கள் தற்போது இல்லை என்ற அளவுக்கு பிரபலமாகியுள்ளார் நடிகை தீபா சங்கர்.
பல படங்களில் நடித்திருந்தாலும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கூக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் மிகவும் பிரபலமானார். தனது இயல்பான குணம் வெகுளியான பேச்சு என்று மக்கள் மனதை கொள்ளையடித்துள்ளார் தீபா. ஆனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே பல சின்னத்திரை சீரியல் மற்றும் படங்களில் நடித்துள்ளார் தீபா சங்கர். இயக்குநர் கோபி இயக்கத்தில் சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடி சாதனை படைத்த மெட்டி ஒலி நாடகம் தான் தீபாவின் முதல் திரை அனுபவம். அதனை தொடர்ந்து கோலங்கள் என்ற நாடகத்திலும் நடித்தார். பல நாடகங்களில் சிறு சிறு வேடம் ஏற்று நடித்து வந்த தீபாவிற்கு 2009ம் ஆண்டு, படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பிரபல நடிகர் பசுபதி நடிப்பில் வெளியான வெடிகுண்டு முருகேசன் என்ற படத்தில் மனநலம் சரியில்லாத ஒரு பெண்ணின் வேடத்தை ஏற்று நடித்து பலரின் பாராட்டை பெற்றார்.
இந்நிலையில் அண்மையில் ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தன்னுடைய நிறம் மற்றும் உருவத்திற்காக பல முறை தான் கேலி செய்யப்பட்டதாகவும். 'நீ என்ன ஐஸ்வர்யா ராய்யா நடிக்கப்போற' என்று பல பேச்சுக்களை தாண்டித்தான் தான் சாதித்தாகவும் மிகவும் மனம் உருகி கூறியுள்ளார். 'அன்று என்னுடைய நிறத்திற்காகவும் உருவத்திற்காகவும் கேலி செய்தார்கள். ஆனால் இன்று அதே உருவத்தையும், நிறத்தையும் தான் மக்கள் ரசிக்கின்றனர்' என்று கூறி பெருமிதம் அடைந்தார் தீபா. சினிமாவிற்கு நிறமோ அழகோ அவசியம் இல்லை என்பதை உணர்த்திய நடிகர் நடிகைகள் பலரின் தீபாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பரா தம்பி.. சூப்பர்.. இணையத்தை கலக்கும் லோ பட்ஜெட் ஜகமே தந்திரம்!
நடிகை தீபா சங்கர் மிக சிறப்பாக நடனமாடக்கூடியவர் என்பது பலரும் அறிந்ததே, திறமை இருப்பவர்கள் அனைவராலும் சாதிக்க முடியும் என்பதற்கு தீபா சங்கர் ஒரு எடுத்துக்காட்டு. சூப்பர் ஸ்டார் பணியில் சொன்னால் திறமை உள்ளவங்க ஜெயிப்பாங்க.. என்ன.. கொஞ்சம் நேரம் ஆகும் அவ்ளோதான்..