ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்தப் படத்தைத் தயாரித்து வெளியிட்டவர் நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர். 'பிங்க்' படத்தின் ரீமேக்கான இப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. இதனைத் தொடர்ந்து 'வலிமை' படத்திலும் அஜித் - வினோத் - போனிகபூர் கூட்டணி இணைந்தது. 


யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் அஜித்துடன் ஹுமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்ததிலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்ததால் அஜித் ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்களிடமெல்லாம் வலிமை அப்டேட் குறித்து கேட்டு வந்தனர்.




இந்தநிலையில், கடந்த பொங்கலுக்கு வலிமை திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாக படம் வெளியிடப்படும் தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. மேலும், படம் எப்பொழுது வெளியாகும் என்று அஜித் ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.பீஸ்ட், கேஜிஎப், ஆர் ஆர் ஆர், விக்ரம் போன்ற பெரிய படங்கள் மார்ச், ஏப்ரலை குறி வைத்துள்ளதால் வலிமை விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அதேபோல், தமிழ் திரையுலகில் நடிகர் அஜித்துக்கு இணையாக இருந்துவரும் நடிகர் விஜய், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து, 'தளபதி 66' படத்தில் நடிகர் விஜய் பிரபல தெலுங்கு இயக்குநர் வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் நடிக்க இருக்கிறார். நடிகர் விஜய் தனது இத்தனை ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் முதன்முறையாக தெலுங்கு சினிமாவில் நுழைந்து இருப்பது அனைவரிடமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 




தற்போது, 'தளபதி 66' மற்றும் 'AK61' இடையே வலுவான தொடர்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முன்னணி நடிகர்களின் இரண்டு படங்களிலும் மூத்த குணச்சித்திர நடிகர் பிரகாஷ் ராஜ் நடிக்க இருக்கிறார். 


ஏற்கனவே, நடிகர் விஜய்யுடன் பிரகாஷ் ராஜ் 'போக்கிரி','கில்லி', 'வில்லு' மற்றும் 'ஆதி'ஆகிய படங்களிலும், நடிகர் அஜித்துடன் 'ஆசை', 'ராசி', 'பரமசிவம்' படங்களிலும் நடித்து மிகப்பெரிய ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு படங்களும் இந்தாண்டு வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண