சில காலத்திற்கு முன்பு, பாரத்பே இணை நிறுவனர் அஷ்னீர் குரோவர் 10 கிலோ எடையை குறைத்ததை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். மேலும் அதற்கு அவருக்கு உதவிய இரண்டு மந்திரங்களைப் பகிர்ந்து கொண்டார். இன்ஸ்டாகிராமில் இதனைப் பகிர்ந்த அஷ்னீர் குரோவர் தான் எடை குறைத்ததற்கு முன்னும் பின்னும் இருந்த இரண்டு படங்களைப் பகிர்ந்து, “10 கிலோ! வெறுமனே ஒழுக்கம் மற்றும் பிடிவாதம் குணத்தால் குறைத்தது” எனக் குறிப்பிட்டிருந்தார்.






உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான உணவு முக்கியமா?


" உணவு என்பது உடலுக்கு நாம் அளிக்கும் தகவல். இது உங்கள் செல்கள், திசுக்கள் மற்றும் இரத்தத்தின் தரத்தை தீர்மானிக்கிறது. எனவே, நீங்கள் உங்கள் உணவில் என்ன சேர்க்கிறீர்கள் என்பதையும், அது உங்களுக்கு என்ன உணர்வைத் தருகிறது என்பதையும் கண்காணிக்க வேண்டியது அவசியம்” 






உடல் எடையைக் குறைக்க் வேண்டும் என இல்லாமல் எனது உடலை நான் ஃபிட்டாக வைத்திருக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் நாம் நமது கட்டுப்பாடுகளைத் திட்டமிட வேண்டும். திட்டங்களை நிறைவேற்ற ஒரு காலக்கெடுவை விதித்துக்கொள்வது மிக முக்கியம். அதை செய்தே தீர வேண்டும் என்கிற தின்மம் இருக்க வேண்டும்.