பாலிவுட் இயக்குநர் சூரஜ் பர்ஜத்யா இயக்கும் புதிய படம் ஊஞ்சாய். 60 வயதை கடந்த நான்கு நண்பர்களின் வாழ்க்கை குறித்த கதையை பின்னணியாக கொண்டு இப்படம் தயாரிக்கப்பட இருக்கிறது. இதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், போமன் இரானி, அனுபம் கேர் மற்றும் டேனி டென்சோங்பா ஆகியோர் 60 வயதான நான்கு நண்பர்களின் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இது இயக்குநர் சூரஜ் பர்ஜத்யாவின் ஏழாவது படம்.


இயக்குனர் சூரஜ் ஊஞ்சாயின் படப்பிடிப்பை அக்டோபர் மாதம் நேபாளத்தில் தொடங்க உள்ளார். இந்த படத்தில் நீனா குப்தா மற்றும் பரினீதி சோப்ரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படக்குழுவில் டேனி டென்சோங்பா மற்றும் சரிகா ஆகியோர் தற்போது புதிதாக இணைந்து இருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. இது 60 வயதுக்கு மேற்பட்ட நான்கு நண்பர்களின் வாழ்க்கையை பற்றி பேசும் இப்படம் மனதுக்கும் மிகவும் நெருக்கமான ஒன்றாக இருக்கும் எனவும், இந்த படத்தின் தயாரிப்பாளர் உருவாக்கிய படங்களில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் எனவும் பேச்சுக்கள் எழுந்துள்ளன. இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் நேபாளத்தில் 40 நாட்கள் நடைபெற உள்ளது.


அதற்கு முன்னதாக மும்பை மற்றும் டெல்லியில் சில காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இப்படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதனை இலக்காக கொண்டு 5 கட்டங்களாக ஊஞ்சாய் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அக்டோபர் முதல் நேபாளத்தில் படப்பிடிப்பை தொடங்க உள்ள இயக்குநர் சூரஜ், நடிகர்களின் கதாப்பாத்திரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகாமல் கவனமாக இருக்கிறார். பரினீதி சோப்ராவின் கதாபாத்திரம் படத்தில்  முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது.



இந்த படத்தில் பாலிவுட் ஸ்டார் சல்மான்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக யூகங்கள் எழுந்தன. ஆனால், அந்த தகவலை படக்குழு மறுத்துவிட்டது. அதே வேளையில் இந்த படத்தின் இயக்குநர் சூரஜ் பிரேம், சல்மான்கானை வைத்து புதிய படம் ஒன்றைய இயக்க இருக்கிறார். அந்த படம் திருமணம் குறித்த கதையை பின்னணியாக கொண்டு தயாராக உள்ளது. திருமணம் முடித்த பிறகு தனிக்குடித்தனம் செல்லும் தம்பதியின் வாழ்க்கையை இந்த படம் பிரதிபலிக்கும் என கூறப்படுகிறது. சல்மான்கான் ஏற்கனவே நடிக்க ஓப்பந்தம் ஆகி இருக்கும் டைகர் 3, கபி ஈத் கபி தீபாவளி, பிளாக் டைகர் மற்றும் அனீஸ் பாஸ்மி படங்களுக்கு படங்களுக்கு பிறகு  சூரஜ் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதற்கிடையே, இயக்குநர் சூரஜின் மகன் அவ்னிஷ் தனது முதல் படத்தை இயக்குவதில் மும்முரமாக இறங்கி இருக்கிறார். DESTINATION WEDDING-ஐ மையமாக வைத்து அவர் இயக்கும் படத்தில் சன்னி தியோலின் இளைய மகன் ராஜ்வீர் நடிக்க உள்ளார்.