மாடலிங் துறையில் கலக்கி வந்த சென்னையை சேர்ந்த பாபினி ஆயிஷா தற்போது டோலிவுட்டில் அறிமுகமாகிறார். இவர் மிஸ் சென்னை அழகி போட்டியில் கலந்து கொண்டு மிஸ் சென்னை 2019 பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இளம் நடிகைக்கு "தி ரைஸிங் ஸ்டார் 2022 " விருது வழங்கி கௌரவித்துள்ளது முன்னணி பத்திரிகை ஒன்று. இந்த விருதை விஜய் ஸ்டாராக இருந்து இன்றும் முன்னணி காமெடி நடிகராக வளர்ந்துள்ள புகழ் மற்றும் நடிகர் கவின் இருவரும் பாபினி ஆயிஷாவிற்கு வழங்கினார்.  


 



"தி ரைஸிங் ஸ்டார் 2022" விருது பெற்ற பாபினி ஆயிஷா:


பல துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி வரும் பத்திரிகை நிறுவனத்தின் இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்றது.  இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் புகழ் மற்றும் நடிகர் கவின் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். அந்த விருதுகள் வழங்கும் விழாவில் தான் பாபினி ஆயிஷாவிற்கு "தி ரைஸிங் ஸ்டார் 2022" விருது வழங்கப்பட்டது.


 






 


பன்முக திறமையாளர் :  


பாபினி ஆயிஷா பாடல், நடனம், தற்காப்பு கலை, நீச்சல் என பல திறமைகளை கொண்டவர் தற்போது நடிப்பில் தனது திறமையை வெளிப்படுத்த தயாராகி விட்டார். தற்போது மலையாள திரைப்படம் ஒன்றில் நடிகையாக அறிமுகமாகி இருக்கும் பாபினி ஆயிஷாவிற்கு டோலிவுட் வாய்ப்புகளும் கதவை தட்டுகிறதாம். விரைவில் இவரை டோலிவுட்டில் பார்க்கலாம். இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என்றார் பாபினி ஆயிஷா.