தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும், பலரின் கனவு கன்னியாகவும் வலம் வருபவர் நடிகை சமந்தா. அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த சமந்தா, விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வெர்ஷனில் நடிகர் நாக சைதன்யாவுடன் இணைந்தார். அந்த சமயத்தில் அவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட, கடந்த 2017ம் ஆண்டு இருவீட்டாரின் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். 


 



மிகவும் சந்தோஷமாக இருவரும் வாழ்ந்து வந்த நிலையில், 2021ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக பரஸ்பரம் முடிவு எடுத்து அதை அறிக்கையாக வெளியிட்டனர். அவர்களின் இந்த அறிக்கை அனைவருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. அவர்களின் விவகாரத்திற்கான காரணத்தை இருவருமே வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.


அவர்களின் பிரிவுக்கு பல்வேறு விஷயங்கள் காரணங்கள் சமூக வலைத்தளங்களில் செய்திகளாக பரவி வந்தன. 'புஷ்பா' படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் ஐட்டம் பாடலான 'ஊ சொல்றியா மாமா...' பாடலுக்கு பயங்கரமாக  நடனமாடி இருந்தார் நடிகை சமந்தா. அது தான் அவர்களின் விவாகரத்துக்கு காரணம் என சில செய்திகள் உலா வந்தன. 


 



சமந்தா - நாக சைதன்யா பிரிவுக்கு பிறகு இருவரும் அவரவர் வேலையில் முழு கவனத்தையும் செலுத்தி வந்தனர். அந்த சமயத்தில் சமந்தா மையோசிட்டிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். பல மாதங்கள் ஓய்வு எடுத்துக் கொண்ட பிறகு சாகுந்தலம் திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார் சமந்தா.


ஆனால் அப்படம் படு தோல்விப் படமாக அமைந்து சமந்தாவின் கேரியரை காலி செய்தது. அதைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டா ஜோடியாக 'குஷி' என்ற காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. 


அடுத்தடுத்து சமந்தா நடித்த படங்கள் தோல்வி அடைந்ததால், சினிமாவில்  இருந்து கொஞ்ச நாள் பிரேக் எடுத்துக்கொள்ளப் போவதாக தெரிவித்து இருந்தார். தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தப் போவதாக தெரிவித்துள்ளார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவ்வப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பது உண்டு. அப்படி ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சமந்தா கூறியுள்ள பதில் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 


 



“உங்களின் தனிப்பட்ட வளர்ச்சியை ஒரு ரீலாக அமைத்தால் அதில் உங்கள் வாழ்க்கையின் எந்த பகுதியை ப்ளூப்பராக பார்த்து சிரிப்பீர்கள்? அதன் மூலம் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடம் என்ன?” என்ற ரசிகரின் கேள்விக்கு சமந்தா பதில் அளிக்கையில், "என்னுடைய விருப்பம் எது, வெறுப்பு எது என்பதை நான் புரிந்து கொள்ளாதது தான் நான் செய்த பெரிய தவறாக நினைக்கிறன். என்னுடைய பார்ட்னரின் தாக்கம் தான் அதில் அதிகமாக இருந்தது. 


நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மோசமாக நேரத்தில்கூட பாடம் கற்றுக்கொள்ள முடியும் என்பதை நான் உணர்ந்த போது தான் நான் தனிப்பட்ட வளர்ச்சியைப் பெற்றேன்" என பதில் அளித்து இருந்தார். 


சமந்தாவின் இந்த பதில் அவரின் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சமந்தாவை நாக சைதன்யா தன்னுடைய முழு கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது தான் அவர்கள் இருவரின் பிரிவிற்கும் காரணமாக இருக்குமோ, அதை தான் சமந்தா மறைமுகமாக இப்படி வெளிப்படுத்துகிறாரோ என பல கேள்விகள் ரசிகர்கள் மனங்களில் எழுந்துள்ளன.