செப்டம்பர் 3 ம் தேதி மனி ஹீஸ்டின் ஐந்தாவது மற்றும் கடைசி சீசன் வெளியீடப்பட இருக்கிறது என்பதை இந்திய மக்களுக்கு நினைவூட்டவும் இந்தியாவில் அதனை பிரபலப்படுத்துவதற்காகவும் இந்திய பிரபலங்களை வைத்து நெட்ஃப்ளிக்ஸ் இந்தியா "ஜல்தி ஆவோ" என்ற பாடலை வெளியிட்டு இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது.



இந்த பாடல் வீடியோவில் இந்தியாவின் திரைப் பிரபலங்களுடன் ஹார்திக் பாண்டியாவும் இணைந்து நடித்துள்ளார். நெட்ஃபிக்ஸில் கடந்த திங்கட்கிழமை அன்று நியூக்லேயா இசையமைத்த “ஜல்தி ஆவோ” பாடலின் இசை வீடியோ வெளியிட்டப்பட்டது. "பெல்லா சியாவோ" என்ற ஸ்பானிஷ் பாடலை இந்தியாவின் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளை கலந்து, அந்தந்த மொழி பிரபலங்களை வைத்து உருவாக்க பட்ட பாடலில் இந்திய இசை வாத்தியங்களை பயன்படுத்தி ரசிக்கும்படியான ஒரு முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளது நெட்ஃப்ளிக்ஸ்.


 


அனில் கபூர், ராணா டகுபதி, ஸ்ருதி ஹாசன், விக்ராந்த் மாஸ்ஸி, ராதிகா ஆப்தே மற்றும் ஹர்திக் பாண்ட்யா போன்ற பல இந்திய பிரபலங்களை உள்ளடக்கிய இந்த இசை வீடியோ, மணி ஹீஸ்டின் முக்கிய கதைகளையும், மறக்கமுடியாத கதாபாத்திரங்களையும் மீண்டும் ஞாபகப்படுத்தும்படியாக உருக்கப்பட்டுள்ளது. இந்தியில் அனில் டென்வர், ​​நாணயத்தின் படுக்கையில் நடனமாடுவது தொடங்கி, தெலுங்கில் பாடலுக்கு தோன்றும் ராணா, தமிழில் பாடல் பாடி நைரோபியை நமக்கு நினைவூட்டும் ஸ்ருதி வரை வீடியோ பல சர்ப்ரைஸ்களை உள்ளடக்கியுள்ளது. ஸ்ருதி ஒரு ஸ்ட்ரெச்சர் படுக்கையில் படுத்து, உதட்டில் பூ வைத்துக்கொண்டு தமிழில் பாடலைப் பாடுகிறார். ஹர்திக் சிவப்பு ஜம்ப்சூட்டுகளுடன் வந்து ஆச்சர்யமாளிக்கிறார்.



சீசன் ஒன்றில் ப்ரொபசர் தனது மாஸ்டர் பிளானை உருவாக்குவது போலவே, ரசிகர்கள் கூடி விவாதிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.


 


நைரோபிக்கு அஞ்சலி தொடங்கி, பெர்லின், மாஸ்கோ மற்றும் ஒஸ்லோவை பட்டியலில் சேர்த்து இறந்த அனைத்து கதாபாத்திரங்களையும் நமக்கு நினைவகோட்டி அவர்களுக்காக அஞ்சலி செலுத்துவதாக கூறும்போது அந்த லிஸ்டில் கடைசியாக ராதிகா ஆப்தே "ஆர்டுரோவுக்காக" என்று குறிப்பிடுவதுதான் மயிரசிலிற்கும் இடம். குழப்பமடைந்த விக்ராந்த் மாஸ்ஸி, "அவர்தான் உயிரோடு இருக்கிறாரே" என்று கூறும்போது, ​​ராதிகா, "இனி இறப்பதற்காக" என்று முடிக்கிறார்.


 


"ஜல்தி ஆவோ" பற்றி பேசுகையில், நியூக்லேயா ஒரு பேட்டியில், "நான் மணி ஹீஸ்டின் மிகப்பெரிய ரசிகன், எனவே இதற்கு வேலை செய்வது நல்ல அனுபவமாக இருந்தது. தொடரை நேசிக்கும் ஒருவராக, நானும் மற்ற அனைத்து ரசிகர்களும் என்ன உணர்கிறோம் என்பதை பாடல் வெளிப்படுத்துகிறது. வீடியோவை படமாக்குவது ஒரு அற்புதமான அனுபவம் மற்றும் அதில் இடம்பெறும் அனைத்து சிறந்த கலைஞர்களும் அதை உயிர்ப்பித்தனர். நாடு முழுவதும் பரவியிருக்கும் ரசிகர்களின் உணர்வை உண்மையாகக் கொண்டாடும் பாடல் பல மொழிகளிலும், பல மொழிகளிலும் உள்ளது. கடைசியாக, நான் சொல்லக்கூடியது - "மணி ஹீஸ்ட் - ஜல்தி ஆவோ! "


"ஜல்தி ஆவோ" வின் நோக்கம் செப்டம்பர் 3 அன்று ஸ்பானிஷ் நிகழ்ச்சியான மனி ஹீஸ்டின் சீசன் ஐ வெளியிடுவதற்கு முன்னதாக பார்வையாளர்களை கைப்பற்றுவதாகும். "ஜல்தி ஆவோ" இந்த முறை இந்திய ரசிகர்களுக்காக ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது என்பதை தெரிவிக்கவும் இந்த வீடியோ உருவாக்கப்பட்டது. அதற்காகத்தான் இடையில் தமிழ் பாடல் வரிகளை ,தெலுங்கு பாடல் வரிகளும் இடம்பெற்றன.