சினிமா என்பது முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சமாகவே பார்க்கப்பட்டாலும் சமீப காலமாக மக்களுக்கு கொண்டு செல்ல நினைக்கும் ஏராளமான நல்ல கருத்துக்களை படத்தின் மூலம் கடத்த முயற்சி செய்கிறார்கள். அப்படியான தரமான திரைப்படங்கள் வெளியாகி வந்தாலும் ஒரு சில படங்களில் வரும் காட்சிகள் மக்கள் ரசிக்கும் படியாக இருந்தாலும் அவை அநியாயத்திற்கு நியாயமே இல்லாத மக்களை ஏமாற்றுவதாக உள்ளது. அப்படி தமிழ் சினிமாவில் வந்த படுஅடாவடியான சில நம்ப வைத்து ஏமாற்றிய காட்சிகள் பற்றி பார்க்கலாம்.


 



சூர்யவம்சம் : ஒரே பாடலில் பணக்காரர் 


நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பாக்குது... என்ற ஒரே பாடலில் பணமே இல்லாமல் அவதிப்படும் சரத்குமார் ஓஹோ என வளர்ந்து ஊரே போற்றும் அளவுக்கு பெரிய தொழில் அதிபராக வளர்ந்து பல பேருக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு உயர்ந்துவிடுவார். என்ன தான் படமாக இருந்தாலும் கொஞ்சமாவது லாஜிக் என்பது இருக்க வேண்டாமா. உழைப்பின் மூலம் ஒருவர் வெற்றி காண முடியும் என்பதை உணர்த்தினாலும் இந்த பாடலை இப்போது பார்த்தாலும் சிரிப்பு சிரிப்பாகவே வருகிறது. இதையே ரஜினி அண்ணாமலை படத்தில் செய்திருப்பார். ஆனால் பாட்டின் பின்னணி அதை நம்பும்படியாக மாற்றிவிட்டது. 


வேலையில்லா பட்டதாரி : இன்ஸ்டன்ட் காதல் 


வேலை வெட்டி எதுவும் இல்லாமல் ஊர் சுற்றும் தனுஷ். பெற்ற அப்பாவே அவனை மதிப்பதில்லை. அப்படி இருக்கையில் பக்கத்துக்கு வீட்டு பெண்ணான அமலா பால் அதுவும் ஒரு மருத்துவர் ஜன்னல் வழியாக தனுஷை பார்த்து காதல் வயப்படுவது கொஞ்சம் ஓவராகவே இருந்தது. வேலையில்லா பட்டதாரியை தானாக வந்து காதலை சொல்லி லவ்ஸ் விடுவது எல்லாம் நிஜத்தில் சாத்தியம் தானா?


யாரடி நீ மோகினி : ஒரே நாளில் கோடிங் 


வேலைக்கு சேரும் தனுஷை இங்கிலீஷ் பேச தெரியவில்லை என அவமானப்படுத்துகிறார் மேலதிகாரியான நயன்தாரா. ஆனால் அதே நயன்தாரா தன்னுடைய டீமுக்கு ஒரே நாளில் கோட்டிங் கற்று கொடுத்து ப்ராஜெக்ட்டை முடிக்கும் அந்த டெக்னீக் எல்லாம் நிஜத்தில் செல்லுபடியாகுமா? 


 



திருச்சிற்றம்பலம் : மறைமுகமான காதல் 


தனுஷ் தன்னுடைய காதல் பற்றி சிறுவயது முதல் நெருங்கிய தோழியாக இருக்கும் நித்யா மேனனிடம் கேட்பாராம். அவரும் நண்பனின் காதலுக்கு  ஐடியா எல்லாம் கொடுப்பாராம். கடைசியில் நித்யா மேனன் சிறுவயது முதலே தனுஷ் மீது காதலோடு பழகியது கிளைமாக்ஸ் காட்சியில் தான் தனுஷுக்கே தெரியவருமாம். என்னடா போங்கு இது. நிஜத்தில் இப்படி எல்லாம் மறைமுகமாக காதலை மறைத்து வைக்க முடியுமா?


மௌன ராகம் : லவ் டார்ச்சர்


ரேவதியை துரத்தி துரத்தி காதலிக்கும் கார்த்திக். எத்தனை முறை ரேவதி கார்த்திகை அவமானப்படுத்தி அனுப்பினாலும் மீண்டும் மீண்டும் டார்ச்சர் செய்து அவரை காதலிக்க வைத்து விடுவார். ரொமான்டிக்காக டார்ச்சர் செய்தால் ஒரு பெண்ணை கவர்ந்து விடலாம் என்பது தவறான ஒரு லாஜிக். அதை மக்கள் ரசிக்கும் படியாக சொன்னாலும் அது தவறு தான்.


 



வாரணம் ஆயிரம் : ரயில் பயண காதல் 


ரயில் பயணத்தில் உடன் பயணிக்கும் நபர் ஒரு திருமணமாகாதவராக, காதலிக்காதவராக இருப்பதே ஒரு அரிதான விஷயம் என்றால் பார்த்தவுடன் அவர்கள் மீது காதல் ஏற்படுவது சினிமாவில் மட்டுமே சாத்தியமாகும். இப்படி போன்ற காதல் காட்சிகளை பார்த்து தான் பெரும்பாலான இளைஞர்கள் ஏமாந்து போகிறார்கள். 



இப்படி தமிழ் சினிமாவில் லாஜிக்கே இல்லாமல் மக்களை ரசிக்க வைக்கிறோம் என்ற பெயரில் ஏமாற்றும் ஏராளமான காட்சிகள் உள்ளன. இது போன்ற ஸ்கேம் காட்சிகளை நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் ட்ரோல் செய்து ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.