திரை ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் ஏராளமான திரைப்படங்கள் வாராவாரம் வெளியாகி வருகிறது. அந்த வகையில் வரும் மார்ச் 28 மற்றும் 29ம் தேதி வெளியாக இருக்கும் படங்களின் பட்டியலை பார்க்கலாம்.


ஆடு ஜீவிதம் :


மலையாள திரையுலகின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ், அமலா பால், வினித் சீனிவாசன், ரிக் அபி, சந்தோஷ் கீழத்தூர், லீனா உள்ளிட்டோரின் நடிப்பில் பான் இந்தியன் திரைப்படமாக மார்ச் 28ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் 'ஆடு ஜீவிதம்'. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.


 



காட்ஜில்லா x காங்: தி நியூ எம்பயர்:


ஆடம் விங்கார்ட் இயக்கத்தில் பிரையன் டைரி ஹென்றி, டான் ஸ்டீவன்ஸ், ரெபேக்கா ஹால், ஆடம் ஸ்மித், அலெக்ஸ் ஃபெர்ன்ஸ், அலெக்ஸ் டைம், ஆங்கி அட்லர்-கூப்ஸ் உள்ளிட்டோரின் நடிப்பில் மார்ச் 29ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் காட்ஜில்லா x காங்: தி நியூ எம்பயர்.   


தி பாய்ஸ் :


சந்தோஷ் பீட்டர் ஜெயக்குமார் இயக்கி நடித்துள்ள அடல்ட் திரைப்படம் 'தி பாய்ஸ்'. ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், புகழ் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் மார்ச் 29ம் தேதி வெளியாக உள்ளது


கா :


ஷாலோம் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் ஜான் மேக்ஸ் தயாரிப்பில் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மியா, சலீம் கவுஸ், மாரிமுத்து, கமலேஷ், அக்ஷிதா, நவீன் மற்றும் பலர் நடித்துள்ள இப்படம் மார்ச் 29ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் நடிகை ஆண்டிரியா வனவிலங்கு புகைப்படக் கலைஞராக நடித்துள்ளார். 



இடி மின்னல் காதல் :


பாலாஜி மாதவன் இயக்கத்தில் பிக் பாஸ் புகழ் சிபி, பவ்யா திரிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ராதா ரவி, பாலாஜி சக்திவேல், ஜெய் ஆதித்யா, ஜெகன், வின்சென்ட் நகுல், மனோஜ் முல்லத், மோனா பெத்ரே, அனுஷா, ஸ்ரீ ராம், சோமு, சிவராஜ், ருத்ரு, யாஸ்மின் பொன்னப்பா உள்ளிட்டோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் மார்ச் 29ம் தேதி வெளியாக உள்ளது. 


வெப்பம் குளிர் மழை :


எப்டிஎப்எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து இயக்கத்தில் திரவ், இஸ்மத் பானு, எம்.எஸ். பாஸ்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'வெப்பம் குளிர் மழை'. இப்படம் வரும் மார்ச் 29ம் தேதி வெளியாக உள்ளது. 




பூமர் அங்கிள் :


ஸ்வதேஷ் இயக்கத்தில் ஒலிம்பியா மூவிஸ் மற்றும் ஏவிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'பூமர் அங்கிள்'. நீண்ட இடைவேளைக்கு பிறகு ஓவியா நடித்துள்ள இப்படத்தில் ரோபோ ஷங்கர், சேஷு, எம்.எஸ். பாஸ்கர், பாலா, தங்கதுரை என மிக பெரிய காமெடி பட்டாளமே நடித்துள்ளது. இப்படம் வரும் மார்ச் 29ம் தேதி வெளியாக உள்ளது.  
  


நேற்று இந்த நேரம் :


கிளாப்-இன் ஃபில்மோடெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் சாய் ரோஷன் கே.ஆர். எழுதி இயக்கியுள்ள திரைப்படம் 'நேற்று இந்த நேரம்'. பிக் பாஸ் ஷாரிக், ஹரிதா மற்றும் மோனிகா ரமேஷ் நடித்துள்ள இப்படம் மார்ச் 29ம் தேதி வெளியாக உள்ளது. 


 



ஹாட்ஸ்பாட் :


கலையரசன், சாண்டி மாஸ்டர், சோபியா, அம்மு அபிராமி, கவுரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், சுபாஷ், ஜனனி ஐயர் உள்ளிட்டோரின் நடிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஹாட்ஸ்பாட். இப்படம் வரும் மார்ச் 29ம் தேதி வெளியாக உள்ளது. 


அழகி:


தங்கர் பச்சான் இயக்கத்தில் 22 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்கள் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடித்த படம் அழகி. பார்த்திபன், தேவயானி, நந்திதா தாஸ், மோனிகா, விவேக் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான இப்படம் 100 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. இப்படம் வரும் மார்ச் 29ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.