இந்த வாரம் ஓடிடியில் வெளியாக இருக்கும் திரைப்படங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 


ஒரு படம் வெளியான உடனேயே அதை தியேட்டரில் போய் பார்த்து விட வேண்டும் என்ற ஆசை வரும். அது தான் புதுப்படங்களுக்கு கிடைக்கும் மரியாதை. ஆனால் சமீப காலமாக அந்த ட்ரெண்ட் முற்றிலும் மாறிவிட்டது. கொரோனா நோய் பரவல் காரணமாக மக்கள் திரையரங்கில் சென்று பார்க்க இயலாது என்பதால் படங்களை ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிட்டனர். ஆனால் அதற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து இன்று கிட்டத்தட்ட அனைத்து படங்களுமே ஓடிடியில் வெளியாவது வளமான ஒன்றாகி விட்டது. 


 



தியேட்டரில் படம் வெளியானது ஒன்று சில மாதங்களில் அப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்படுகிறது. திரையரங்கிற்கு சென்று பார்க்க இயலாதவர்கள் அவர்களுக்கு விருப்பமான படங்களை ஓடிடி தளத்தில் பார்த்து ரசிக்கலாம். இந்த ட்ரெண்டும் நல்ல தானே  இருக்கு. 



ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி  கொண்டு தான் இருக்கிறது. அதே சமயம் ஓடிடி தளத்திலும் படங்கள் ரிலீஸாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் அக்டோபர் 21ம்  தேதி என்னென்ன மொழி திரைப்படம் எந்தெந்த  ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது எனும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 


மலையாள திரைப்படங்களான  மைக் (Mike) - சிம்ப்ளி சவுத் (Simply South) தளத்திலும், அம்மு (Ammu) - அமேசான் பிரைம் (Amazon Prime) தளத்திலும் வெளியாகவுள்ளது. 


 






 


தமிழ் வெப்சீரிஸான  பேட்டக்காளி (Petta Kaali)- ஆஹா (Aha) தளத்தில் வெளியாகவுள்ளது.


தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான கணம் (Kanam) / ஓகே ஒக ஜீவிதம் (Oke Oka Jeevitham) திரைப்படம் சோனி லைவ் (Sony LIV) தளத்தில் வெளியாகவுள்ளது.


தெலுங்கு திரைப்படங்களான பிம்பிசாரா (Bimbisara) - ஜீ 5 (Zee 5 ) , கிருஷ்ணா விரிந்த  விஹாரி (Krishna Vrinda Vihari ) - நெட்ஃபிலிஸ் (Netflix), கபடநடக சூத்திரதாரி (Kapatanataka Suthradhaari) - ஆஹா (Aha) தளத்திலும் வெளியாகவுள்ளது. 
 
ஹிந்தி திரைப்படங்களான பிரம்மாஸ்திர (Bhrahmastra) - ஹாட்ஸ்டார் (Hotstar) , தி ட்ரிப்ளிங் S3 (The Tripling S3) திரைப்படம் ஜீ 5 ser (Zee 5 Ser) தளத்திலும் வெளியாகவுள்ளது. 


உங்களின் ஃபேவரட் படங்களை ஓடிடி தளத்தில் கண்டு மகிழுங்கள்.