ஏப்ரல் இரண்டாம் வாரமான நாளை ஏப்ரல் 7-ஆம் தேதியன்று ஓடிடி தளங்களில் வெளியாக இருக்கும் தமிழ், ஆங்கிலம், பெங்காலி, இந்தி, மலையாளம் மற்றும் மற்ற மொழி படங்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம். 

அயோத்தி - ஜீ 5 (தமிழ் )

டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார், பிரியா அஸ்ராணி, புகழ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் இந்த வாரம் ஜீ 5 தலத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. இதுவரையில் தமிழ் சினிமா காணாத ஒரு வித்தியாசமான திரைக்கதை. ஒரு நாளில் நடக்கும் கதையை மிகவும் விறுவிறுப்பாக நகர்த்தியுள்ளார்கள். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற ஒரு திரைப்படம்.

புர்கா - ஆஹா / சிம்ப்ளி சவுத் (தமிழ்)

இஸ்லாமிய பெண்களின் புர்காவின் பின்னணியில் உருவான இப்படத்தில் கலையரசன், மிர்னா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நேரடியாக இப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

N4 - சிம்ப்ளி சவுத் (தமிழ்)

இயக்குநர் லோகேஷ் குமார் இயக்கத்தில் மைக்கேல் தங்கதுரை, வினுஷா தேவி, அனுபமா குமார், கேப்ரில்லா, அழகு, அபிஷேக் சங்கர், வடிவுக்கரசி என பலரும் நடித்துள்ள இப்படம் காசிமேடு பகுதியை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையில் நிகழும் ஒரு சம்பவம் குறித்தும், அதனால் எப்படி அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் குறித்த கதை. 

பிரணயவிலாஸாம் (Pranayavilasam) - ஜீ 5 (மலையாளம்)

ரோமாஞ்சம் (Romancham) - ஹாட்ஸ்டார் (மலையாளம்)

ஆசாலு (Assalu) - ஈடிவி வின் ( தெலுங்கு)

சுப்பா (Chupa) - நெட்பிளிக்ஸ் ( ஆங்கிலம்)

ஹங்கர் (Hunger) - நெட்பிளிக்ஸ் (தாய்லாந்து)

பீஃப் (Beef) - நெட்பிளிக்ஸ் (ஆங்கிலம்)

ஓபெலின்டா (OhBelinda) - நெட்பிளிக்ஸ் (துருக்கி)

காஸ்மோஸ் (Cosmos) - நெட்பிளிக்ஸ் (ஆங்கிலம்)

ஏப்ரல் 7-ஆம் தேதியான நாளை ஓடிடி வெளியாகும் படங்களை கண்டுகளித்து இந்த வீக் எண்ட் நாட்களை குதூகலமாக கொண்டாடுங்கள்.