லெஜண்ட் சரவணன்..
தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான ஜவுளிக்கடைகளில் ஒன்றாக திகழ்வது சரவணா ஸ்டோர்ஸ். லெஜண்ட் சரவணா ஸ்டோர்சின் உரிமையாளரான லெஜண்ட் சரவணன் கடந்த சில ஆண்டுகளாக தனது கடைக்கான விளம்பரங்களுக்கு தானே நடித்தார். இதன்மூலம் அவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார்.
பின்னர், நடிப்பின் மேல் ஆசை கொண்ட அவர் உல்லாசம் படத்தை இயக்கிய ஜேடி – ஜெர்ரி என்ற இரட்டை இயக்குனர்களின் இயக்கத்தில் தி லெஜண்ட் என்ற படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நீண்ட நாட்களாக தமிழ் திரையுலகில் எந்த படத்திற்கும் இசையமைக்காத ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படம் மூலமாக மீண்டும் ஒரு கம்பேக் கொடுத்துள்ளார். லெஜண்ட் படத்தில் நாயகன் லெஜண்ட் சரவணனுடன் நடிகர் பிரபு, மறைந்த நடிகர் விவேக், நடிகர் மயில்சாமி, நாசர், தம்பி ராமையா, கோவை சரளா, காளி வெங்கட், விஜயகுமார் ஆகியோர் நடித்துள்ளனர். நாயகியாக ஊர்வசி ரெடேலா மற்றும் கீதிகா நடித்துள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜூசுந்தரம் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். எடிட்டர் ரூபன் எடிட் செய்துள்ளார்.
ட்ரைலர்..
இந்நிலையில் லெஜண்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. மிகவும் பிரம்மாண்டாக நடைபெற்ற விழாவில் திரைத்துறையைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். ஹன்சிகா உள்ளிட்ட 10 நாயகிகள் விழாவுக்கு வருகைதந்தனர். இசை வெளியீட்டின்போதே படத்தின் ட்ரைலரும் வெளியானது. அதிரடி சண்டைக்காட்சிகள், பிரம்மாண்ட காட்சிகள் என ஒரு குட்டி சிவாஜி படம் போல இருந்தது தி லெஜண்ட் ட்ரைலர்.
30 ட்ரெஸ்..
இந்நிலையில் இப்படத்தின் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய சத்யா படம் குறித்து பேசியுள்ளார். அதில், தி லெஜண்ட் படத்தில் இடம்பெற்றுள்ள மொசலோ மொசலு பாடலுக்கு லெஜண்ட் சரவணன் கடுமையாக உழைத்திருப்பதாகவும், குறிப்பாக அந்த ஒரு பாடலுக்கு மட்டும் 30 ஆடைகள் அவர் அணிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு ஆடைகளையும் அணிந்து பார்த்து அவர் மெனக்கட்டார் என்றும், இது தனக்கு ஆச்சரியமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்
மொசலோ மொசலு பாடலை ஹாரிஸ் ஜெயராஜ் தனது தரமான இசை மூலம் ஒரு துள்ளலான பாடலாக ரசிகர்களுக்க விருந்தாக வைத்துள்ளார். இந்த பாடலை பிரபல பாடலாசிரியரும், கவிஞருமான விஜய் எழுதியுள்ளார். இந்த பாடலுக்கு ராஜூ சுந்தரம் நடனம் அமைத்துள்ளார்.