தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகை அடா ஷர்மா விபத்தில் சிக்கிய நிலையில் அவரது உடல்நலம் குறித்த அப்டேட்டை வெளியிட்டார்.
சாலை விபத்து
தெலுங்கானாவின் கரீம்நகரில் நடைபெறும் இந்து ஏகா யாத்திரையில் (இந்து ஒற்றுமைக்கான அணிவகுப்பு) நடிகை அடாஷர்மா கலந்து கொள்ளவிருந்தார். ஆனால் விபத்து காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனால் கவலையடைந்த ரசிகர்கள் அவரது உடல்நலம் குறித்து ஆவலாக இருந்தனர். இதனால் அவர் பெயர் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது. இந்த நிலையில் அடா ஷர்மா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ட்விட்டரில் தனது ரசிகர்களுக்கு தனது உடல்நலம் குறித்த அப்டேட்டை வெளியிட்டார்.
சீரியசாக ஒன்றும் இல்லை
ட்விட்டரில் இதுகுறித்து எழுதிய அவர், "நான் நன்றாக இருக்கிறேன் தோழர்களே. எங்கள் விபத்து குறித்து பரவும் நிறைய செய்திகள் வருகின்றன. முழு குழுவும், நாங்கள் அனைவரும் நலமாக இருக்கிறோம், சீரியஸாக எதுவும் இல்லை, பெரிதாக யாருக்கும் எதுவும் ஆகவில்லை, உங்கள் அக்கறைக்கு நன்றி," என்று எழுதினார். அவரது ட்வீட் 594K பார்வைகளையும் 9,912 லைக்ஸ்களையும் பெற்றுள்ளது.
அவரது ரசிகர்கள் அவரது உடல்நலத்தை அறியவும், விரைவாக நலம் திரும்ப பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளனர். ஒரு ட்விட்டர் பயனர், "உங்கள் குழுவைக் காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி" என்று எழுதினார். மற்றொருவர், உறுதிப்படுத்தியதற்கு நன்றி, நான் மிகவும் கவலையாக இருந்தேன், மேலும் பயணத்தின் போது மிகவும் கவனமாக இருக்குமாறு நடிகையை கேட்டுக் கொண்டார்.
அன்னையர் தின பதிவு
அடா ஷர்மா சமீபத்தில் அன்னையர் தினத்தை தனது உண்மையான அம்மா மற்றும் படத்தில் தனக்கு அம்மாவாக நடித்த தாய்மார்களுடன் கொண்டாடினார். இன்ஸ்டாகிராமில் அடா ஷர்மா தனது தாய் மற்றும் பாட்டி மற்றும் படத்தில் தனது குடும்ப உறுப்பினர்களாக நடித்த நடிகர்களுடன் போஸ் கொடுக்கும் படத்தைப் பகிர்ந்து கொண்டார். அதில், "இந்த ஆண்டு அன்னையர் தினத்திற்காக ரீல் மற்றும் ரியல் அம்மாக்களுடன் #happymothersday. இந்த அன்னையர் தினத்தை #TheKeralaStory மூலம் பிளாக்பஸ்டராக மாற்றியதற்காக எனது ரீல் மற்றும் ரியல் லைஃப் அம்மாக்களுக்கு மிக்க நன்றி… உலகம் முழுவதும் உள்ள தாய்மார்கள் மற்றும் மகள்களுக்கு எனது வாழ்த்துக்கள். நன்றி!" என்று பதிவு செய்திருந்தார்.
‘தி கேரளா ஸ்டோரி’
‘தி கேரளா ஸ்டோரி’ பாக்ஸ் ஆபிஸில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய பிறகு, அடா ஷர்மா தற்போது பாலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக இருக்கிறார். சர்ச்சைக்குரிய கதைக்களத்தைக் கொண்டிருந்தாலும், சுதிப்தோ சென் இயக்கிய இப்படம் சமீபத்தில் பாக்ஸ் ஆபீஸில் ரூ.136 கோடியைத் தாண்டியது. இப்படம் வெளியானது முதல் எண்ணற்ற சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. பெரும்பான்மையான முக்கிய விமர்சகர்கள் திரைப்படத்தை உண்மைத் தவறுகளுக்காகவும், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மத வேறுபாட்டை தூண்டியதற்காகவும் குற்றம் சாட்டினர். மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் திரைப்படம் தடைசெய்யப்பட்டது, ஆனால் ஹரியானா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் இந்த படத்துக்கு வரி விலக்கு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.