இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், லட்சுமி மேனன், வடிவேலு, ராதிகா சரத்குமார், சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட பலர் நடித்துள்ள சந்திரமுகி 2 திரைப்படம் செப்டம்பர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.  இத்திரைப்படத்தின்  இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ராகவா லாரன்ஸ் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது பெயரை கெடுக்காம பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற பயம் அதிகமாகவே இருந்ததாக  ராகவா லாரன்ஸ் இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்தார்.

இந்நிலையில், ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 படத்துக்கு வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் சினிமா வட்டாரத்தில் வேகமாக பரவி வருகின்றன.  நடன இயக்குநராக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர்  ராகவா லாரன்ஸ். ஆனால் அவர் நடித்த பல படங்கள் சரியாக ஓடவில்லை. இந்நிலையில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதனை அடுத்து அவர் எடுத்த காஞ்சனாவும் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது. ஆனால் காஞ்சனா 2 மற்றும் 3 ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை பெறவில்லை. 


ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் படங்களை தாண்டி அவர் மற்ற இயக்குநர்களுடன் இணைந்து நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை பெறவில்லை.  சந்திரமுகி 1  மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், சந்திரமுகி 2 படம் ராகவா லாரன்ஸுக்கு மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்திரமுகி இசை வெளியீட்டு விழாவில் இந்த படத்துக்காக ராகவா லாரன்ஸ் ரொம்பவே கஷ்டப்பட்டு நடித்துள்ளார் என வடிவேலு பாராட்டி பேசியிருந்தார்.

தமிழ் சினிமாவில் இளம் ஹீரோக்களே 30 கோடி முதல் 50 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் நிலையில்,  ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 படத்துக்கு 27 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  சந்திரமுகியாக நடிக்க பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு  சுமார் 10 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.  முன்னதாக ராகவா லாரன்ஸ் நடிக்கும் படங்களில் தெலுங்கு ரைட்ஸ், இந்தி ரைட்ஸ் உள்ளிட்டவற்றை சம்பளத்தை தாண்டி கேட்டு வாங்கிக் கொள்வாராம். ஆனால், சமீப காலமாக தயாரிப்பாளர்களின் கஷ்டம் அறிந்து ராகவா லாரன்ஸ் சம்பளத்தை மட்டும் பெற்றுக்கொள்வதாக கூறப்படுகிறது.  


மேலும் படிக்க


CM Stalin: ”தமிழ்நாட்டை காப்பாற்றி விட்டோம்; வரும் தேர்தலில் இந்தியாவை காப்பாற்ற வேண்டும்" - முதல்வர் ஸ்டாலின்


Sabarimala Temple: ஓணம் வந்தல்லோ.. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு...யாருக்கெல்லாம் அனுமதி?