ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் உள்ளிட்டோர் நடித்திருந்த படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. கடந்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியானது.

Continues below advertisement


ஆணாதிக்க மனப்பான்மையையும், அடிப்படைவாதத்தையும் கொண்டிருக்கும் ஒரு வீட்டுக்கு பெண் ஒருவர் வாழ சென்றால் அவள் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் என்னென்ன துன்பத்தை அனுபவிக்கிறாள் என்பதை எதார்த்தம் மீறாமல் சொன்ன இந்தப் படத்தை மலையாள ரசிகர்கள் மட்டுமின்றி பிற மொழி ரசிகர்களும் கொண்டாடி தீர்த்தனர்.




ரசிகர்கள் மட்டுமின்றி பிற மொழி திரை கலைஞர்களும், விமர்சகர்களும் கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்துக்கு தங்களது வரவேற்பை கொடுத்தனர். இதனையடுத்து, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை ரீமேக் செய்ய தமிழ் மற்றும் தெலுங்கில் தீவிரமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.


அதன்படி, தமிழில் இந்தப் படத்தை, ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆர். கண்ணன் ரீமேக் செய்கிறார். திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தில் தமிழுக்கு ஏற்றவாறு கதையில் சில மாற்றங்கள் செய்யப்படவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.




நிமிஷா கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். அவரோடு பாடகி சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்திரன், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜெர்ரிசில்வஸ்டர் வின்சென்ட் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.


 






தமிழில் உருவாகும் தீ கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படமும் மலையாளம் போலவே கவனம் ஈர்க்குமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது. இந்நிலையில், புத்தாண்டையொட்டி தீ கிரேட் இந்தியன் கிச்சன் தமிழ் ரீமேக்கின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: ஒரு பொய் நியூஸ்! ரஜினி சான்ஸும் போய்ட்டு! 1000 கோடி வசூலும்.. - புலம்பும் பிரேமம் இயக்குநர்