நெட்பிலிக்ஸ் நிறுவனம் வெளியிடும் ‛தி கிரே மேன்’(The Gray Man) என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்து வருகிறார் பிரபல நடிகர் தனுஷ். "தி கிரே மேன்" நெட்ப்ளிக்ஸ் தயாரிப்பில் அவென்ஜர்ஸ் பட இயக்குநர்களான ஆண்டனி, ஜோ ரூஸோ சகோதரர்கள் இந்தப் படத்தை இயக்குகின்றனர்.
நெட்ஃபிக்ஸ்ஸின் மிகப்பெரிய பட்ஜெட் படமான "தி கிரே மேன்' மார்க் கிரீனியின் அதே பெயரின் நாவலை அடிப்படையாகக் கொண்டது இந்த படம். ரியான் கோஸ்லிங் மற்றும் கிறிஸ் எவன்ஸ் ஆகியோர் 'தி கிரே மேன்' நடிகர்களாகத் தலைமை தாங்குகிறார்கள், அனா டி அர்மாஸ், வாக்னர, ஜூலியா பட்டர்ஸ், பில்லி பாப் தோர்ன்டன், ஜெசிகா ஹென்விக் மற்றும் ஆல்ஃப்ரே வூடார்ட் ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்தநிலையில், கிறிஸ் எவன்ஸ், ரியான் கோஸ்லிங், அனா டி அர்மாஸ் மற்றும் இந்திய சூப்பர் ஸ்டார் தனுஷ் ஆகியோர் நடித்துள்ள இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான தி கிரே மேன் படத்தின் கேரக்டர் போஸ்டர்களை நெட்பிலிக்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் ட்ரைலர் (நாளை) மே 24 ம் தேதி வெளியாகிறது. மேலும், இந்தப்படம் ஜூலை 22 அன்று நெட்பிலிக்ஸில் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே தெரிவித்தது. கேரக்டர் போஸ்டர்களில் நடிகர் தனுஷ் ஒரு சிறப்பான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.
நடிகர் தனுஷ் அந்த போஸ்டரை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ருஸ்ஸோ பிரதர்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த மாதம் வெளியானது. அப்போது தனுஷ் காரின் மேற்கூரையில் ரத்த வெள்ளத்தில் நின்று கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்