Chinna Chinna Kangal Lyrics: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் இரண்டாவது பாடலான “சின்ன சின்ன கண்கள்” பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று வெளியாகியுள்ளது. முன்னதாக இப்படத்தின் விசில் போடு பாடல் வெளியான நிலையில், இன்று விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இரண்டாவது சிங்கிள் வெளியிடப்பட்டுள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் நடிகர் விஜய் இப்பாடலைப் பாடியுள்ள நிலையில், ஏஐ தொழில்நுட்பம் மூலம் பவதாரிணியின் குரல் இந்தப் பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 1997ஆம் ஆண்டு வெளியான காதலுக்கு மரியாதை படத்தில் இளையராஜா இசையில் இடம்பெற்ற ‘ஓ பேபி’ பாடலுக்குப் பிறகு இந்தப் பாடலில் விஜய் - பவதாரிணி குரல்கள் இணைந்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் பாடலின் வரிகளை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார். 

இரட்டை வேடம், டைம் ட்ராவல் என தி கோட் படத்தில் விஜய் நடிக்கும் நிலையில், தந்தை விஜய் மற்றும் அவருக்கு ஜோடியாக நடிக்கும் சினேகாவுக்குமான குடும்ப மெலடியாக இந்தப் பாடல் அமைந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இந்நிலையில், சின்ன சின்ன கண்கள் பாடலின் வரிகளைப் பார்க்கலாம்!

சின்ன சின்ன கண்கள் பாடல் வரிகள்

பவதாரிணி: சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ..

கருவறை மீண்டும் மணக்கிறதோ..

எட்டு வைத்து வானம் வருகிறதோ..

தித்திப்புயல் நெஞ்சில் மூழ்கிறதோ..

கண்ணே.. இனி ஒரு போதும் பிரிவே இல்லை!

பிஞ்சே.. நீ ஒரு கோடி தாயின் பிள்ளை!

உறவெல்லாம் ஒன்றாக,

விழியெல்லாம் தேனாக,

இரவெல்லாம் தூளாக,

பறவைக்கூட்டில் விண்மீன் பூக்க...

வாராத மாமணியாய் 

வந்தாயே உய்வாக,

மனசெல்லாம் ஒளி வீச,

உன் மீசை கூட மழலை பேச..

(சின்ன சின்ன கண்கள்)

சரணம் 1: 

விஜய்: மழை பொழிகிற இரண்டாம் நாளில் விழும் துளியில் மாசில்லை

இது ஒரு வகை இரண்டாம் பிறவி, வாழ்வில் இனிமேல் குறையில்லை..

யுத்தம் புரிகிற மண்ணில் மண்ணில், ரத்த பந்தம் போல் பலமில்லை..

வா எழுந்திடு.. வாள் சுழற்றிடு..  வான் கிழித்திடு.. பயமில்லை!

கீச்சை மறந்துப்போன, கிளியின் மௌனம் போல..

இதயம் தவித்த போது, நீ இசையாய் உள்ளே வந்தாயே!

உறவில்லாம் ஒன்றாக, விழியெல்லாம் தேனாக, இருளெல்லாம் தூளாக, பறவைக்கூட்டில் விண்மீன் பூக்க...

சரணம் 2:

விஜய்: தோழி உனைப் பார்த்ததும், நேற்றின் முகம் யோசனை..

ரெட்டை ஜடை வாசனை.. நீதானா? நிஜம்தானா? வயதின் முதல் காதலா? வார்த்தை இல்லா வெய்யிலா?

சாட்சி இல்லா சாரலா? நீ தானா? நிஜம் தானா?

அடி ஏதும் அறியா என் நெஞ்சில் இறகாக விழுந்தாயே..

காலம் பருவம் கடந்தாலும், கலையாமல் நின்றாயே!

போவோம் பல நாட்கள் பின்னே பின்னே..

வாழ்வோம் நாம் வளராத பிள்ளை போலே...

பவதாரிணி: சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ..

கருவறை மீண்டும் மணக்கிறதோ..

எட்டு வைத்து வானம் வருகிறதோ..

தித்திப்புயல் நெஞ்சில் மூழ்கிறதோ...