தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகனாக திகழும் நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'லியோ' படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தில் நடித்து வருகிறார். பிரஷாந்த், பிரபு தேவா, ஜெயராம், மோகன், சினேகா, வைபவ், அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, ஜெயராம், பிரேம்ஜி அமரன், யுகே திரன், பார்வதி நாயர், VTV கணேஷ், யோகி பாபு, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் மற்றும் கஞ்சா கருப்பு உள்ளிட்ட மிக பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் கூடுதல் தகவலாக நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 


விஜய் 'தி கோட்' படத்திற்கு பிறகு ஒரே ஒரு படத்தில் நடித்துவிட்டு பின்னர் முழுமையாக அரசியலில் இறங்க இருப்பதால் இப்படத்தின் ரிலீசுக்காக வழக்கத்தை காட்டிலும் மிகவும் அதிகமான மக்கள் உற்சாகம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் செப்டம்பர் 5ம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


 


 



எடிட்டிங், டப்பிங் பணிகள் அனைத்தும் மிகவும் மும்மரமாக நடத்தி முடிக்கப்பட்டது. கிராஃபிக்ஸ் பணிகளும் அமெரிக்காவில் தீவிரமாக நடத்தி முடிக்கப்பட்டது. அந்த வகையில் 'தி கோட்' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என வெங்கட் பிரபு விஎஃப்எக்ஸ் அலுவலகத்தின் வெளியே நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


 






 


கலிபோர்னியாவின்  லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள விஷுவல் எஃபெக்ட்ஸ் ஸ்டூடியோவான லோலா VFXல் 'GOAT' போஸ்ட் புரொடக்ஷன் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெங்கட் பிரபு பகிர்ந்து போட்டோ போஸ்ட் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்காகி வருகிறது. 'தி கோட்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுடன் முடிவடைந்தது. இப்படத்தின் விசில் போடு மற்றும் சின்ன சின்ன கண்கள் பாடல்களை படக்குழு வெளியிட்டது. அதை தொடர்ந்து நடிகர் விஜய் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை போஸ்டர் மூலம்  வெளியிட்டார்.  


அடுத்த அப்டேட்டுக்காக காத்திருந்த மக்களுக்கு வெங்கட் பிரபுவின் இந்த அப்டேட் கூடுதல் சந்தோஷத்தை கொடுத்துள்ளது. உலகெங்கிலும் வெளியாக இருக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் டைம்' படம் இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு படமாகும்.