தமிழ் சினிமாவில் ஸ்டார் அந்தஸ்தில் உள்ள நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (The GOAT) படத்தில் நடித்து முடித்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனத்தின் கீழ் அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தை தயாரிக்க நடிகர் பிரஷாந்த், பிரபு தேவா, ஜெயராம் , அஜ்மல், மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதிக்கட்ட ஆக்ஷன் காட்சிகளுக்கான படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்றது. படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. எடிட்டிங், டப்பிங் பணிகள் ஒரே நேரத்தில் நடைபெற்று வருவதுடன் விஎஃப்எக்ஸ் பணிகள் முழுமதுமாக நிறைவடைந்து விட்டன. The GOAT திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்ற தகவல் ஏற்கெனவே வெளியானது. 


 



 


நடிகர் விஜய் இரட்டைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் எதிர்பார்த்த அளவு கவனம் பெறவில்லை. அதைத் தொடர்ந்து இரண்டாவது சிங்கிள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் The GOAT திரைப்படத்தின் ஆஃப் ஸ்கிரீன் புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி  வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் விஜய் மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஏதோ ஒரு காட்சி குறித்து ஆழ்ந்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 


 







THe GOAT படம் குறித்த ஏதாவது ஒரு அப்டேட் வெளிவரதா என ஆவலுடன் காத்திருந்த மக்களுக்கு இந்த ஆஃப் ஸ்கிரீன் புகைப்படம் வெளியாகி உள்ளது சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.