தி கோட் ட்விட்டர் விமர்சனம் :
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜயின் 68 வது படமாக இன்று வெளியானது 'தி கோட்' திரைப்படம். பிரபுதேவா , பிரசாந்த் , சினேகா, லைலா , மோகன் , வைபவ் , ஜெயராம் , பிரேம்ஜி , மினாக்ஷி செளதரி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விறுவிறுப்பான ஒரு ஆக்ஷன் கதையாக வெளியான இப்படத்தில் காமெடி, ஃபேமிலி செண்டிமெண்ட் என அனைத்தின் கலவையாக எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. விஜயின் அறிமுகம் மற்றும் ஆக்ஷன், எதிர்பார்ப்புகளை இரட்டிப்பாகும் வகையில் இடைவேளைக் காட்சி என இப்படத்துக்கான ட்விட்டர் விமர்சனம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.
தலைப்பில் சனாதனமா ?
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் விசிக எம்பி ரவிக்குமார் சமூகவலைத்தள பக்கமான எக்ஸ் பக்கத்தில் தி கோட் படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’? என கேள்வி எழுப்பி சலசலப்பை ஏற்படுத்தினார்.
துருவ் சார்ஜாவின் காட்ஃபாதர் யார் ?
கே.ஜி.எஃப். திரைப்படத்திற்கு பிறகு கன்னட திரையுலகில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி படங்களில் ஒன்று நடிகர் துருவ் சார்ஜா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மார்ட்டின்'. தமிழ் உட்பட 13 மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. அக்டோபர் 11ம் தேதி வெளியாக இருக்கும் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய துருவ் சார்ஜா, தன்னுடைய உறவினரான அர்ஜுன் சார்ஜா தான் எனக்கு காட்ஃபாதர் என பேசி இருந்தார்.
இணையத்தில் லீக்கானது 'தி கோட்' :
வெங்கட் பிரபு - விஜய் கூட்டணியில் உருவாகி மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியன் 'தி கோட்' திரைப்படம் இரண்டு காட்சிகள் மட்டுமே திரையரங்கில் திரையிடப்பட்ட நிலையில் அதற்குள் இணையத்தில் வெளியாகியுள்ளது. பல கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் அதற்குள் தமிழ் ராக்கர்ஸ் (Tamilrockers) இணையதளத்தில் வெளியாகி இருப்பது படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதை நீக்குவதற்கான சட்ட நடவடிக்கைகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கோட் ரிலீஸ் ஆஃபர் :
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே இன்று வெளியானது. சேலம் மாவட்டத்தில் 50க்கு மேற்பட்ட திரையரங்குகளில் தி கோட் திரைப்படம் வெளியானது. பட்டாசு வெடித்தும் மேளதாளங்கள் முழங்கவும் நடனமாடி கொண்டாடினர். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காக்கி சட்டை மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி சேலைகள் வழங்கப்பட்டது.