இயக்குநர் பிரபுசாலமன் இயக்கத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கும்கி. இப்படத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. அதேபோன்று கும்கி படத்தில் ஒளிப்பதிவு செய்த சுகுமாரை திரை பிரபலங்கள் பலரும் பாராட்டினர்.
கும்கி 2 குறித்த அப்டேட்
பெரும் வரவேற்பை பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த செய்தி தற்போது வெளியாகியுள்ளது. இயக்குநர் பிரபு சாலமன் - ஒளிப்பதிவாளர் சுகுமார் கூட்டணியில் கும்கி 2 படம் உருவாக இருக்கிறது. முதல் பாகத்தை போன்றே இப்படம் காட்டுக்குள் நடக்கும் கதைாயக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. 13 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் கும்கி 2 படம் வெளியாவதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு நிவாஷ் நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். மதியழகன் நாயகனாக நடித்துள்ளார். ஹீரோயின் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. முன்னதாக இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இசையமைப்பாளர் இமான் இல்லை
இந்நிலையில், நடிகை ஸ்ருதி ஹாசன் கும்கி 2 படத்தின் போஸ்டரை தனது சமூகவலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், மனிதனுக்கும் விலங்கிற்கும் உள்ள அன்பை பேசும் படம் அவர் குறித்துள்ளார். படம் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் செய்திகளும் விரைவில் வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இயக்குநர் பிரபுசாலமன் - இமான் கூட்டணியில் உருவான மைனா, கும்கி, கயல், தொடரி போன்ற படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் திரை ரசிகர்கள் வெகுவாக கவர்ந்திருக்கிறது. பாடல்களை தாண்டி படமும் மெஹாஹிட் அடைந்துள்ளன. காதல் பாடல்கள் என்றால் இந்த படங்களின் லிஸ்டும் இடம்பெறும். அந்த வகையில் வெற்றி கூட்டணியாக பயணித்து வந்துள்ளனர். ஆனால், கும்கி 2 படத்தில் இமான் இல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.