Viruman Box Office collections: இதுவரை இல்லாத வசூல்... முதல் நாளில் குவித்த விருமன்!
நடிகர் கார்த்தி நடிப்பில் நேற்று வெளியான விருமன் படத்தின் முதல்நாள் வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

நடிகர் கார்த்தி நடிப்பில் நேற்று வெளியான விருமன் படத்தின் முதல்நாள் வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான ‘விருமன்’ திரைப்படம் நேற்று வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது 'விருமன்' படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் மட்டும் 'விருமன்' திரைப்படம் 8.2 கோடி வசூல் செய்துள்ளது. இதற்கு முன்னதாக கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் வெளியான அன்றைய தினம் 5.12 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
Just In




தமிழ் சினிமாவில் கிராமத்து கதைக்களத்தை கையில் எடுத்து படமாக்குபவர் இயக்குநர் முத்தையா. குட்டிபுலி, கொம்பன், மருது,கொடி வீரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.படங்கள் கிராமத்து ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் இயக்கிய படங்கள் அனைத்திலும் சாதிய சாயல் இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவான தேவராட்டம் படம் , கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
படமும் தோல்வியை தழுவியது. அதன் பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் புலிக்குத்தி பாண்டி என்ற படத்தை இயக்கினார். அதுவும் எதிர்பாத்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் மீண்டும் ஒரு கிராமத்து கதையை முத்தையா கையில் எடுத்த படம்தான் ‘விருமன்'.
இந்த படத்தில் கார்த்தி நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக பிரம்மாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் இயக்குநர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு சொந்தமான ‘2டி எண்டர்டைன்மெண்ட்’ தயாரிக்க, இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா களமிறங்கியுள்ளார்.