இரவின் நிழல் படத்தில் நிர்வாணமாக நடித்த காட்சி குறித்து அப்படத்தின் நடிகை பிரிகிடா விளக்கமளித்துள்ளார்.


தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர்களில் ஒருவரான பார்த்திபன் எழுதி இயக்கி, நடித்து தயாரித்திருக்கும் திரைப்படம்  இரவின் நிழல்.  நடிகைகள் பிரிகிடா, வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.  உலகிலேயே முதல் “நான்லீனியர் சிங்கிள் ஷாட்” படம் என்ற அடையாளத்துடன் இரவின் நிழல் கடந்த ஜூலை 15 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றது. 






பார்த்திபனிடம் உதவி இயக்குநராக வேலை செய்ய வந்த பிரிகிடாவுக்கு இரவின் நிழலில் நடிக்க வாய்ப்பு கொடுத்திருந்தார். இந்தப்படத்தில் நிர்வாண காட்சி ஒன்றிலும் அவர் நடித்திருந்தார். இதனிடையே பிரிகிடா சேரி குறித்து சர்ச்சையாக பேசியது, சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் - பார்த்திபன் இடையேயான கருத்து மோதல் ஆகியவை இடையே கருத்து மோதலுக்கு நடுவே படம் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.குறிப்பாக படத்தின் மேக்கிங் காட்சிகளுக்காகவே படத்தை அனைவரும் தியேட்டரில் பார்த்தால் படக்குழுவினரின் உழைப்பு புரியும் என பலரும் தெரிவித்துள்ளனர். 


இதனிடையே படத்தில் நிர்வாணமாக நடித்த காட்சி குறித்து அப்படத்தின் நடிகை பிரிகிடா விளக்கமளித்துள்ளார். அந்த காட்சியில் நடிக்க நான் குட்டியாக உடை அணிந்திருந்தேன். எலாஸ்டிக் மாதிரி இருக்கும் அந்த உடையை மேலே இழுத்து விட்டால் அணிந்திருப்பதே தெரியாது. அது ஒரு ட்ரிக் தான். உண்மையிலேயே நான் அந்த காட்சியில் நடிக்க ரொம்ப சிரமப்பட்டேன். ஏனென்றால் குட்டியான உடையணிவதை நான் விரும்புவதில்லை. இதனால் எப்படி இந்த காட்சியில் நடிக்கப்போகிறேன் என்ற பயம் எனக்குள் இருந்தது. 90 நாட்கள் ரிகர்சலின் போது நான் அந்த காட்சிக்காக சிரமப்பட்டேன் என பிரிகிடா தெரிவித்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிட்பில் வீடியோக்களை காண