தங்கலான்


பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் வரும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பார்வதி திருவொத்து , மாளவிகா மோகணன் , பசுபதி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. தங்கலான் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தொடங்கியுள்ள நிலையில் படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை படக்குழுவினர் பகிர்ந்து வருகின்றனர்.


ஐந்து மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்ற மாளவிகா மோகனன்


கோலார் தங்க வயல்களில் வாழ்ந்த பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு பீரியட் டிராமாவாக உருவாகி இருக்கிறது தங்கலான் படம். இந்தப் படத்திற்காக இந்தியாவில் உள்ள பல்வேறு வரண்ட நிலங்களில் கடும் வெப்பத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது. நடிகை மாளவிகா மோகனன் இப்படத்தில் ஆரத்தி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  அவரது கதாபாத்திர தோற்றம் ரசிகர்களிடம் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. ஆரத்தி கதாபாத்திரத்தில் நடித்தது குறித்தும் அதில் தான் எதிர்கொண்ட சவால்களை குறித்தும் மாளவிகா மோகனன் நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார். 






அவர் பேசியபோது “ என்னுடைய கதாபாத்திரத்திற்கு மட்டுமே தினமும் 4 முதல் 5 மணி நேரம் மேக் அப் போட வேண்டும். காஸ்டியூம் , மேக் அப் , டேட்டூ என ஒவ்வொன்றும் தனித்தனியாக நடைபெறும். ஒரு நாள் முழுவதும் அத்தனை விதமான கெமிக்கல் போட்டுக் கொண்டு நடிக்க வேண்டும். மேலும் கண்களில் லென்ஸ் வேறு போட்டிருக்க வேண்டும். ஒரு காட்சி சரியாக வரவேண்டும் என்பதற்காக கடும் வெயிலை சகித்துக் கொண்டு அந்த காட்சிக்காக நாங்கள்  நடித்து முடிப்போம். ஆனால் ஷூட் முடிந்தபின் தான் அந்த கெமிக்கல் சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். கண்களுக்கு , சருமத்திற்காக என நான் ஒரே நேரத்தில் ஐந்து மருத்துவர்களிடம் சிகிச்சைப் பெற்று வந்தேன். வெயிலில் காலில் செருப்பில்லாமல் வெறுங்காலில் நடக்க வேண்டும். ரஞ்சித் இந்த மாதிரியான கடினமான சூழலுக்கு பழக்கப்பட்டவர் என்பதால் அவர் எளிதாக நடித்து காட்டுவார். ஆனால் எங்களுக்கு அது ரொம்ப கஷ்டமானதாக இருக்கும்” என்று மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.