Vikram : ஒரு சர்ப்ரைஸ் இருக்கு ஆனால் சொல்லமாட்டேன்.. மஞ்சும்மெல் பாய்ஸ் இயக்குநருடன் இணைகிறாரா விக்ரம்?

இந்த ஆண்டு மிகப்பெரிய ஹிட் படம் கொடுத்த மலையாள இயக்குநருடன் படத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்

Continues below advertisement

விக்ரம்

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் நடிகர் விக்ரம் தற்போது நடித்துள்ள படம் தங்கலான் , பா ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் பார்வதி திருவொத்து  , மாளவிகா மோகனன் , பசுபதி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தங்கலான் படம் வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளைத் தொடங்கியுள்ளார் நடிகர் விக்ரம். இதன் பகுதியாக இன்று கேரளா புறப்பட்டுச் சென்றார் விக்ரம் . கேரளாவில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் விக்ரம் மலையாள இயக்குநர் ஒருவருடன் கதைப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

Continues below advertisement

மஞ்சும்மெல் பாய்ஸ் இயக்குநருடன் இணைகிறார் விக்ரம் ?

 ”இந்த ஆண்டு ஹிட் படம் கொடுத்த மலையாள இயக்குநருடன் ஒரு படத்திற்கான கதை விவாதம் நடந்து வருகிறது. இதுகுறித்த கூடுதல் தகவல் எதுவும் என்னால் இப்போது சொல்ல முடியாது. இது ஒரு பீரியட் கதை. இது நடக்கலாம் நடக்காமலும் போகலாம் “ என்று அவர் தெரிவித்தார். இந்த ஆண்டு மிகப்பெரிய ஹிட் படம் கொடுத்தவர்கள் என்கிறபோது அனைவரது மனதிற்கு வரும் முதல் நபர் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை இயக்கிய இயக்குநர் சிதம்பரம் தான்.

மஞ்சும்மெல் பாய்ஸ் படம் தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்றபோது அப்படக் குழுவினரை கமல் , ரஜினி உட்பட பல்வேறு தமிழ் நடிகர்கள் நேரில் சந்தித்து பேசினார்கள். அதில் நடிகர் விக்ரமும் ஒருவர். இந்த சந்திப்பின் போது விக்ரமிடம் சிதம்பரம் கதை ஒன்றை சொல்லியிருப்பதாகவும் இது குறித்த விவாதம் நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியது. தற்போது விக்ரம் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளது முன்பே வெளியான தகவலுடன் ஒத்துப்போவதால் விக்ரம் மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குநருடன் இணைவது கிட்டதட்ட உறுதிபடுத்தப் பட்டுள்ளது. 

வீர தீர சூரன்

தங்கலான் படத்தைத் தொடர்ந்து விக்ரம் சித்தா பட இயக்குநர் அருண்குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். விக்ரமின் 62 ஆவது படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு வீர தீர சூரன் என டைட்டில் வைக்கப் பட்டுள்ளது. எஸ்.ஜே சூர்யா , துஷாரா விஜயன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைக்கிறார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola