நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு படம் உருவாகி வருகிறது. இப்படத்தில்  நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது. வாரிசு படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.






இதனிடையே வாரிசு படத்தின் தயாரிப்புகுழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “ 30 வருட விஜயின் சினிமா வாழ்கையை கொண்டாடும் நேரமிது.. வாரிசு அப்டேட் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும்” என குறிப்பிடப்பட்டது. முன்பாக, இப்படத்திற்கு இசையமைத்த தமன், “தீயணைப்பு வண்டிகளே.. தயாராக இருங்கள்..லவ் யூ விஜய் அண்ணா” என ட்வீட் செய்து எதிர்ப்பார்ப்பை எகிற செய்தார்.






இந்நிலையில், வாரிசு படத்தின் புது அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த அப்டேட்டில், வாரிசு படத்தின் இரண்டாம் பாடலாக “தீ தளபதி” என்ற பாடல் வரும் டிசம்பர் 4 ஆம் தேதியன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் பின்னணியில் செஸ் போர்ட்டில் இடம் பெறும் ராஜா காயின் தீ பிடித்து எரிவது போல போஸ்டர் டிசைன் செய்யப்பட்டுள்ளது.


வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் : 


வாரிசு திரைப்படத்தின் முதல் சிங்கிளான ரஞ்சிதமே பாடல் வெளியாகி மெகா ஹிட் அடித்த நிலையில்,  ரஞ்சிதமே பாடல் யூடியூபில் 75 மில்லியன் பார்வையாளர்களை எட்டி சாதனை படைத்துள்ளது. நடிகர் விஜயின் சொந்த குரலில் உருவாகியுள்ள இந்த பாடல் பட்டிதொட்டி எல்லாம் ஹிட் அடித்திருக்கிறது. இசையமைப்பாளர் தமன் இசையில் பாடகி மானசி இந்த பாடலை பாடியுள்ளார்.