Varisu First Single Update: ‛வருகிறார் வாரிசு’ விஜய் ரசிகர்களே இன்று மாலை... நீங்கள் மயங்கும் வேளை...!
2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த தீபாவளி தினத்தன்று வாரிசு படத்தின் முதல் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளதாலும் வாரிசு படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Just In




தமன் இசையமைக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கடந்த ஜூன் 21 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. அதன்பின்னர் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் கசிந்ததால் படத்தின் மீது நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த தீபாவளி தினத்தன்று வாரிசு படத்தின் முதல் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படக்குழு சார்பில் எவ்வித அறிவிப்பும் வராததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். ஆனால் தீபாவளிக்கு வாரிசு படத்தின் புது போஸ்டர் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள அப்டேட்டில் வாரிசு படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.