மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குடும்பத்தை நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் புகழ்ந்து பேசும் பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் கடைசியாக “லியோ” படம் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து அவர், வெங்கட் பிரபு இயக்கத்தில்  “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” என்ற படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். அதுமட்டுமல்லாமல் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி, லைலா, சினேகா என முக்கிய பிரபலங்கள் பலரும் இப்படத்தில் நடித்து வருகின்றனர். 


இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகலாம் என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி நடிகர் விஜய்  “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை தொடங்கினார். அவரின் அரசியல் வருகை பெரும் அதிர்வலைகளை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது. ஒரு பக்கம் பட ஷூட்டிங், மறுபக்கம் கட்சிப்பணிகள் என இரண்டையும் ஒருங்கே விஜய் கவனித்து வருகிறார். 






2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் தான் தன்னுடைய இலக்கு என்பதை அவர் தெளிவாக சொல்லி விட்டார். மேலும் இன்னும் ஒரு படத்துடன் சினிமாவில் நடிப்பதை நிறுத்தவுள்ளதாக கூறியுள்ளார். இதனால் அவரின் 69வது படத்துக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் முடிவு எடுத்துள்ளார். விஜய்யின் கடைசிப்படத்தை இயக்கக்கூடிய வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. 


இதனிடையே தலைவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வது தொடங்கி வழக்கமான கட்சிகளின் செயல்பாடுகளிலும் தமிழக வெற்றிக் கழகம் களமிறங்கி விட்டது. இந்நிலையில் விஜய்யின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் விஜய், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் குடும்பத்தை பற்றி பெருமையாக பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 



உதயநிதி, தயாநிதி, அருள்நிதி, தமிழரசு, கனிமொழி  என இவர்களின் பெயர்களை கேட்கும்போதெல்லாம் என் படத்துக்கு டைட்டிலாக வைக்கலாம் என தோன்றும். அந்த அளவுக்கு ரொம்ப ஃபவர்புல்லான மற்றும் அழகான பெயர்கள் இவை. இந்தியாவில் பரம்பரை பரம்பரையாக பெயர் சொல்லக்கூடிய குடும்பம் என்றால் அது ஜவஹர்லால் நேருவினுடையது தான். அதேபோல் தமிழ்நாட்டில் பெயர் சொல்லக்கூடிய குடும்பம் நம்ம கலைஞர் அய்யாவுடையது” என அந்நிகழ்ச்சியில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் பேசியிருப்பார். 




மேலும் படிக்க: Mysskin: கேள்வி கேட்டவர்களை அவமானப்படுத்தினாரா மிஷ்கின்? - சர்ச்சையை கிளப்பிய பேச்சு!