Shoba Chandrasekhar: வாகை சூடு விஜய் என தனது மகனின் அரசியல் பயணத்துக்கு ஷோபா சந்திரசேகர் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 

நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக அறிவித்துள்ளார். இன்று தனது அரசியல் கட்சியின் பெயரை ”தமிழக வெற்றி கழகம்” என்று குறிப்பிட்டு அறிவிப்பை வெளியிட்டார். அரசியல் கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளதாக குறிப்பிட்ட விஜய், 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை ஒட்டி தனது அரசியல் பயணம் இருக்கும் என்றும் அறிவித்துள்ளார். விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தனது அரசியல் கட்சி போட்டியிடாது என்ற விஜய், எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்க விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார். 

 


இன்று விஜய் புதிதாக அரசியல் கட்சி தொடங்கியதற்கு சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். அந்த வகையில் விஜய்யின் தாயான ஷோபா சந்திரசேகர் தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசியுள்ள ஷோபா சந்திரசேகர், “ தனக்கு பின்னால் இருப்பவர்களும் முன்னால் வர வேண்டும் என்று நினைப்பவர் விஜய். ஒவ்வொரு குடிமகனுக்கும், குடிமகளுக்கும் அரசியல் பொறுப்பு உள்ளது.
  சாதி, மதத்தில் உடன்பாடு இல்லாதவர். வாகை சூடு விஜய்” என கூறியுள்ளார்.

 





இதேபோல் நடிகை ஷனம் செட்டி விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட இன்ஸ்டகிராம் பதிவில், “ வா தலைவா..தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற வாழ்த்துகள் விஜய் சார். நாங்கள் உங்களை உண்மையாக நம்புகிறோம். நீங்கள் அனைவருக்கும் சமமனான, ஊழல் இல்லாத, சாதிமத பேதமில்லாதவராக இருப்பீர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.