விஜயின் தாயான ஷோபா சந்திரசேகர் ட்விட்டரில் இணைந்திருக்கிறார். 


 






தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இவரது தாயார் ஷோபா சந்திரசேகர். பாடகி, எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் என  பன்முகத்தன்மை கொண்ட இவர் இருமலர்கள் எனும் திரைப்படத்தில் மகாராஜா ஒரு மகாராணி என்ற பாடலை பாடி பாடகியாக அறிமுகமானார். தொடர்ந்து பல பாடல்களை பாடிய அவர் தனது கணவரான சந்திரசேகர் இயக்கிய பல படங்களில் கதை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இப்படி 50 க்கும் மேற்பட்ட கதைகளை எழுதியுள்ள ஷோபா 10 க்கும் மேற்பட்ட  படங்களை தயாரித்தும் உள்ளார். 




இயக்குநர் அவதாரமும் எடுத்துள்ள ஷோபா நண்பர்கள் மற்றும் இன்னிசை மழை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கணவர் சந்திரசேகரை திருமணம் செய்து கொண்ட ஷோபாவுக்கு விஜய் என்ற மகனும், வித்யா என்ற மகளும் பிறந்தனர். இதில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட வித்யா சிறு வயதிலேயே இறந்து விட்டார். தங்கையை இழந்த அதிர்வில் அதுவரை சுட்டியாக இருந்த விஜய் இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு அமைதியாகிவிட்டார். ஷோபாவிற்கு எப்போதுமே விஜய் மீது தனிப்பிரியம் உணடு.




ஆரம்ப காலத்தில் தந்தையின் படங்களில் நடித்து பின்னர் உச்சநட்சத்திரமாக மாறிய நடிகர் விஜய் அப்பாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக பேசுவதில்லை என்று சொல்லப்படுகிறது.




தாய் ஷோபாவுடன் மட்டுமே அவர் பேசுவதாக கூறப்படுகிறது. அண்மையில் எஸ் ஏ சி 81 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விஜய் கலந்து கொள்ளவில்லை. எஸ்ஏசி வெளியிட்ட புகைப்படங்களில் ஷோபா மட்டுமே எஸ்.ஏ.சிக்கு கேக் ஊட்டி பிறந்தநாளை கொண்டாடியிருந்தார். இது சமூக வலைதளங்களில் விவாதமாகவும் மாறியது. அண்மையில் விஜய் தனது 48 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அன்றும் தனது மகன் பற்றி பல விஷயங்களை பகிர்ந்திருந்தார். விஜய் தற்போது  ‘வாரிசு’ படத்தில் நடித்து இருக்கிறார்.


 






அடுத்ததாக அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.