நடிகர் சிவகார்த்திகேயன் நன்றி மறந்ததாக கொதித்தெழுந்துள்ள விஜய் ரசிகர்கள், தனுஷ் ரசிகர்களின் ஆதரவை எதிர்நோக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனைப் பற்றிக் காணலாம். 

Continues below advertisement

ஜனநாயகன் vs பராசக்தி

கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யின் கடைசிப் படம் என்ற கேப்ஷனோடு உருவாகியுள்ள படம் “ஜனநாயகன்”. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, நரேன், பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் சில காட்சிகள் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி படத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி ஜனநாயகன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் கடைசிப் படத்தைக் காண ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் காத்திருக்கிறது. 

இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள “பராசக்தி” படமும் வருகிறது. சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படத்தில் ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீ லீலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 100வது படம், சிவகார்த்திகேயனின் 25வது படம் என்ற பெருமையுடன் பராசக்தி வெளியாகவுள்ளது. இந்த படத்தை டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள நிலையில் தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. பராசக்தி படம் ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு ஜனநாயகனுக்கு போட்டியாக ஜனவரி 10ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

கோஷ்டி சண்டைக்கு தயாரான ரசிகர்கள்

இந்த நிலையில் விஜய்க்கு எதிராக சிவகார்த்திகேயனை களமிறக்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனத்தை அவரது ரசிகர்கள் வைத்துள்ளனர். வேண்டுமென்றே ஜனநாயகனுக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் கடைசி படம் என்பதால் பெரும்பாலானவர்கள் அதைப் பார்க்க விரும்புவார்கள். ஆனால் அதனை திசை திருப்ப பராசக்தி களமிறக்கப்பட்டுள்ளதாக பொங்கி வருகின்றனர். 

இந்த நிலையில் இந்த சண்டை இப்போது கோஷ்டி சண்டையாக மாறியுள்ளது. விஜய்க்கு எதிராக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அஜித், சூர்யா ஆகிய ரசிகர்களின் உதவியை நாடியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் சிவகார்த்திகேயனுக்கு எதிராக விஜய் ரசிகர்கள் தனுஷ் ரசிகர்களிடம் உதவி கேட்டுள்ளனர். இதனால் சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய கருத்து மோதல் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

அதுமட்டுமல்லாமல் பராசக்தி ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் ஜனநாயகனுக்கு தனுஷ் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.