நடிகர் விஜய் மகளின் செல்ஃபி  சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


நடிகர் விஜய் கடந்த 1999 ஆம் ஆண்டு தனது ரசிகையான சங்கீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் உள்ளனர். விஜயின்  ‘வேட்டைக்காரன்’ படத்தில் ஒரு பாடலுக்கு விஜயுடன் சஞ்சய் இணைந்து நடனமாட, அட்லீ இயக்கத்தில் வெளியான   ‘தெறி’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் திவ்யா நடித்திருந்தார். தொடர்ந்து அவ்வப்போது, சஞ்சய், திவ்யா தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகும்.






வைரல் போட்டோ


அந்த வகையில் திவ்யா தொடர்பான புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப்புகைப்படத்தில் திவ்யா வெள்ளை நிற உடையில், கண்ணாடி முன் நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டு நிற்கிறார். 





நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக  ‘பீஸ்ட்’ படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. அதனைத்தொடர்ந்து அவர் தற்போது தனது 66 ஆவது படத்தில் நடித்து வருகிறார். ‘வாரிசு’ எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில், விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. பிரபல இயக்குநர் ‘வம்சி’ இயக்கும் இப்படத்தில் தென்னிந்திய திரைப்பிரபலங்களான பிரபு, ஷ்யாம், சரத்குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். 


ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்திற்கு தமன் இசைமைக்கிறார். வாரிசு படத்தில் பிரபல நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் வாரிசு படத்தில் விஜய் மொபைல் ஆப் டிசைனராக நடிப்பதாகவும், அவரின் பெயர் விஜய் ராஜேந்திரன் என்றும் சொல்லப்படுகிறது.