கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ‘ பீஸ்ட்’ இந்த படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார்.   விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே  ஒப்பந்தமாகியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மனோஜ் பரமஹம்சா நடனம் அமைக்கிறார். படத்தொகுப்பை நிர்மல் மேற்கொள்ள உள்ளார்.படத்தில் நடிகர்கள் விடிவி கணேஷ், யோகி பாபு, ஷைன் டாம் சாக்கோம், லிலிபுட் ஃபரூக்கி,  அபர்ணா தாஸ், அன்குர் அஜித் விகால் ஆகியோரும் ஒப்பந்தமாகியுள்ளனர். இந்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ச் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் டைட்டில் போஸ்டர்கள் விஜயின் பிறந்த நாளன்று  வெளியாகி சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது. 





 பீஸ்ட் படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் ஜார்ஜியாவில் நடந்து முடிந்த நிலையில் ,கொரோனா இரண்டாம் அலை காரணமாக அடுத்தடுத்த படப்பிடிப்புகள் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் அரசு அறிவித்த அறிவிப்புகளை பின்பற்றி இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் ,  மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஈசிஆர் பகுதிகளில் நடைப்பெற்றது தவிர மால் ஒன்றில் செட் அமைத்து படத்தின் முக்கியமான சண்டைக்காட்சிகளும் படமாக்கப்பட்டன. ஏற்கனவே படத்தின் ஒரு பாடல் மற்றும்  சில காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியானதை பார்த்தோம். ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் ஒரு ரகசிய ஏஜெண்டாக நடிப்பதாக கூறப்படுகிறது. பீஸ்ட் படத்தில் சிவக்கார்த்திகேயன் ஒரு பாடலை எழுதி, அவரே பாட உள்ளார்.  இயக்குநர் செல்வராகவன் படத்தில் இணைய இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.அவர் ஒரு வொயிட் கால வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவரை தவிர  சார்பட்டா படத்தின் மிகவும் புகழ்பெற்ற கதாபாத்திரமான டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் கல்லக்கல் தற்போது மூன்றாவது வில்லனாக பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் இணைகிறார். ஏற்கனவே, மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் உள்ள பீஸ்ட் படக்குழுவில் ‘டான்சிங் ரோஸ்’ ஷபீர்  இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.




பீஸ்ட் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பை வருகிற நவம்பர் மாதத்திற்குள் முடிக்க பீஸ்ட் படக்குழு முடிவெடுத்துள்ளார்களாம். அடுத்தக்கட்டமாக போஸ்ட் புரடெக்ஸன் வேலைகளில் முழுவீச்சில் ஈடுபட உள்ளனர். அதே நேரம் புரமோஷன் வேலைகளில் ஈடுபடுவார்கள் என தெரிகிறது. படத்தை வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிரைலரில் இடம்பெறும் என தெரிகிறது.