இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் பணியாற்றி வரும் லியோ படத்தில் விஜய்யின் காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக நேற்று தகவல் வெளியானது.


தளபதி 68 அப்டேட்


இந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் விஜய் கைக்கோர்க்கும் தளபதி 68 படம் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி வரும் நவம்பர் மாதம் தளபதி 68 படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


லியோ திரைப்படம் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறையைக் குறிவைத்து வரும் அக்.19ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இப்படம் வெளியாகி சில வாரங்களிலேயே நவம்பர் மாதத் தொடக்கத்தில் தளபதி 68 படப் பணிகள் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


படம் பெயர் என்ன?


முன்னதாக தளபதி 68 படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்யுடன் நடிக்க நடிகை ஜோதிகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளியானது. மற்றொருபுறம் நடிகை பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகின.


தளபதி 68 படம் பற்றிய அறிவிப்பு கடந்த மே 21ஆம் தேதி வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கும் நிலையில்,  இப்படத்துக்கு ‘சிஎஸ்கே’  எனப் பெயர் வைக்கப்படலாம் என்றும், கிரிக்கெட்டை மையப்படுத்தி இப்படம் இருக்கக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகின.


லியோ படப்பிடிப்பு நிறைவு


இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி லியோ படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் முழுவீச்சில் காஷ்மீரில் நடைபெற்றது. 50 நாள்களுக்கு மேல் காஷ்மீரில் படக்குழு பணியாற்றிய நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி சென்னையில் லியோ ஷூட்டிங் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் நேற்று லியோ படத்தில் விஜய்யின் காட்சிகள் நிறைவடைந்துவிட்டதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ்  தன் இணைய பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.


எமோஷனல் ட்வீட் பகிர்ந்த லோகேஷ்


“இந்த இரண்டாவது பயணத்தை மீண்டும் சிறப்பானதாக மாற்றியதற்கு நன்றி!” என லோகேஷ் எமோஷனனலாக ட்வீட் செய்துள்ளார்.


 






லியோ படத்தில் நடிகர் விஜய் த்ரிஷாவும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்துள்ளார். அர்ஜுன்,  சஞ்சய் தத், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின், மடோனா செபாஸ்டியன், பிரியா ஆனந்த், ஜோஜூ ஜார்ஜ் என கோலிவுட் தொடங்கி பல மொழி நட்சத்திரங்களும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். அனிருத் இப் படத்துக்கு இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.