Thalapathy 68: யுவன் மட்டுமில்ல... விஜய் படத்தில் இணையும் ‘வாரிசு’ இசையமைப்பாளர்.. தளபதி 68 சுவாரஸ்ய அப்டேட்!

வாரிசு படத்துக்குப் பிறகு தமன் இரண்டாம் முறையாக விஜய் உடன் கைக்கோர்ப்பதாக அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

Continues below advertisement

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் ‘தளபதி 68’ படத்தில் தமன் பணியாற்ற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Continues below advertisement

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘லியோ’ படப்பிடிப்பை முடித்துவிட்டு நடிகர் விஜய் ரிலீஸுக்காக உற்சாகமாகக் காத்திருக்கிறார். வரும் அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில்,  ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வந்த நடிகர் விஜய்யின் அடுத்த படமான தளபதி 68 பற்றிய அறிவிப்பு வெளியானது.

அதன்படி, தளபதி 68 படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இது குறித்து கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி வெங்கட் பிரபு உற்சாகத்துடன் ட்வீட் செய்த நிலையில், இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்திய கதையாக இருக்கும் என்றும் இப்படத்துக்கு சிஎஸ்கே எனப் பெயரிடப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

மேலும் இப்படத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் கைக்கோர்க்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் யுவனுடன் இசையமைப்பாளர் தமனும் இணைய உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக தற்போது தமன் பங்கேற்று வரும் நிலையில், விரைவில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து ப்ரோகிராமராக பணியாற்ற உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிரியங்கா, அது விஜய் படமா எனக் கேள்வி எழுப்பிய நிலையில், இல்லை என தமன்  இப்போது அதுகுறித்து சொல்ல முடியாது என பதில் அளித்துள்ளார்.

இந்நிலையில், வாரிசு படத்துக்குப் பிறகு தமன் இரண்டாம் முறையாக விஜய் உடன் கைக்கோர்ப்பதாக அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

தளபதி 68 படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாகவும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருக்கு ஜோடியாக நடிகை ஜோதிகாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின.

 

Continues below advertisement