Thalapathy 68: பிரபல நடிகைகளை ஓரம்கட்டி ஏன் இந்த முடிவு... யார் இந்த மீனாட்சி செளத்ரி?

Thalapathy 68 Update: தளபதி 68 படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைய இருக்கிறார் இளம் நடிகை மீனாட்சி செளத்ரி. யார் இந்த மீனாட்சி செளத்ரி?

Continues below advertisement

வெங்கட் பிரபு இயக்க இருக்கும் தளபதி 68 படத்தில் நடிகர் விஜய்யுடன் நடிக்க இருக்கிறார் நடிகை மீனாட்சி செளதரி. ஏற்கெனவே தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் மீனாட்சி நடித்துவரும் நிலையில் தற்போது தமிழில் இருக்கும் பிரபல நடிகைகளை ஓரம்கட்டி புதுமுகமான மீனாட்சியைத் தேர்வு செய்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. யார் இந்த மீனாட்சி  செளத்ரி? இவ்வளவு சிறிய காலத்தில் எப்படி இரண்டு முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் அளவுக்கு புகழ்பெற்றார் என்பதைப் பார்க்கலாம்.

Continues below advertisement

மீனாட்சி செளத்ரி

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் நடித்து ரிலீஸூக்குத் தயாராகி வரும் படம் குண்டூர் காரம். முதலில் இந்தப் படத்தின் கதாநாயகியாக நடிக்க இருந்தவர் நடிகை பூஜா ஹெக்டே. ஒரு சில காரணங்களால் இந்தப் படத்தில் அவர் நடிக்க முடியாமல் போனது. தங்களது படத்திற்கு ஏற்ற திறமையை தேடிக்கொண்டிருந்த படக்குழு கடைசியாக தேர்வு செய்தவர் தான் மீனாட்சி செளத்ரி. முன்னதாக தெலுங்கில் வெளியான ’இச்சதா வாகனமுலு‘ என்கிற படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அடி எடுத்துவைத்தவர்.

திரைக்கு முன்

திரைக்கு வருவதற்கு முன்பாக இருந்தே பல்வேறு அங்கீகாரங்களைப் பெற்றவர். கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் கிராண்ட் இண்டர்னேஷ்னல் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்று மிஸ் கிராண்ட் இந்தியா பட்டத்தையும் வென்றிருந்தார்.

அதிர்ஷ்டமா…? திறமையா… ?

ஒரே படத்தில் நடித்து மகேஷ் பாபு மற்றும் விஜய் மாதிரியான இரண்டு மிகப்பெரிய ஸ்டார்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு மீனாட்சிக்கு கிடைத்திருப்பது அதிர்ஷ்டம் என்று தோன்றலாம். ஆனால் வெகு சில படங்களில் நடித்திருந்தாலும் அதில் தனது திறமைகளை சிறப்பாக வெளிபடுத்தி இருக்கிறார் அவர். ஹாட்ஸ்டார் வெளியிட்ட  ‘அவுட் ஆஃப் லவ்’ என்கிற வெப் சிரீஸில் நடித்த மீனாட்சி, தன்னைத் தவிர பிற அனுபவம் மிக்க நடிகர்களுக்கு நிகராக நடித்து ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்றார். இந்நிலையில், தமிழில் இரண்டாவது படத்திலேயே விஜய்யுடன் இவர் இணைந்திருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

தளபதி 68

லியோ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் 68ஆவது படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். தந்தை மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்திற்காக விஜய்க்கு டீ ஏஜிங் தொழில் நுட்பத்தை பயன்படுத்த இருக்கிறது படக்குழு. மேலும் சிம்ரன் இந்தப் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. தளபதி 68 இன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

லியோ

அதே நேரத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விஜய், த்ரிஷா, அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மன்சூல் அலிகான், கெளதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.

Continues below advertisement