பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் முதல் நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி விட்ட நிலையில் முதல் நாளே ஆட்டம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் நேற்று (அக்டோபர் 1) பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கியது. கூல் சுரேஷ், பவா செல்லதுரை, அக்ஷயா உதயகுமார், பிரதீப் ஆண்டனி, விஷ்ணு விஜய், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, ஜோவிகா விஜயகுமார், மணி சந்திரா, ரவீனா தாஹா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். தொடர்ந்து 7வது சீசனாக நடிகர் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இப்படியான நிலையில் இன்று காலை பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியானது. இதில் பிக்பாஸ் வீட்டில் முதல் கேப்டனாக தேர்வு செய்யப்படுள்ள விஜய் வர்மாவை தன்னை குறைவாக கவர்ந்த நிக்ஸன், பவா செல்லதுரை, அனன்யா, ஐஷூ, வினுஷா தேவி, ரவீனா தாஹா ஆகிய 6 போட்டியாளர்களை இன்னொரு வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் மீண்டும் வழக்கமான போட்டி நடக்கும் வீட்டுக்குள் வரும்போது தான் உங்களிடம் நான் பேசுவேன் என பிக்பாஸ் கறாராக சொல்லி விடும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
இப்படியான நிலையில் இன்றைய 2வது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் சரவண விக்ரம், ஸ்மால் பாக்ஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்ட 6 பேருக்கான நிபந்தனைகளை படிக்கிறார். அதில், “ஒவ்வொரு வாரமும் 6 பேர் கேப்டனால் தேர்வு செய்யப்பட்டு இந்த வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அந்த 6 பேர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் உள்ளது.
அதன்படி,
- ஸ்மால் பாக்ஸ் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லக்கூடாது
- எந்த டாஸ்கிலும் பங்கேற்கக்கூடாது
- ஷாப்பிங் போகக்கூடாது
- அவர்களுடைய 3 வேளைக்கான உணவை பிக்பாஸ் போட்டியாளர்கள் தான் முடிவு செய்வார்கள். அதனை தான் சமைக்க வேண்டும்
- பிக்பாஸ் வீட்டின் ஹவுஸ் கிளீனிங் மற்றும் பாத்ரூம் கிளினீங் வேலைகளை இந்த ஸ்மால் பாக்ஸ் 6 போட்டியாளர்கள் தான் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.