தளபதி 68 படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்த படத்தில் சினேகா உள்ளிட்டோர் நடிக்கவிருந்தாலும், விஜய் மற்றும் லைலா இருக்கும் புகைப்படம்  சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு காரணம் என்னவென்றால், இந்த படத்தில் நடிக்க உள்ள சினேகா ஏற்கனவே விஜயுடன் வசீகரா படத்தில் நடித்துவிட்டார். ஆனால், 90ஸ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகைகளில் ஒருவராக வலம் வந்த லைலா விஜய்யுடன் நடிப்பது இதுவே முதல் முறை என்பதால் தான் லைலா விஜயுடன் நடிப்பதை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். 


கூடுதல் ஸ்பெஷல் என்னவென்றால், நேற்று லைலா தனது பிறந்தநாளை கொண்டாடினார். தனது பிறந்தநாளில் மூன்று மகிழ்ச்சியான விஷயம் நடைபெற்று இருப்பதாக லைலா மிகுந்த மகிழ்ச்சியுடன் பேசி வீடியோ வெளியிட்டிருக்கிறார். லைலா பேசியதாவது: ”லைலா பிதாமகன் வெளியாகி 20 ஆண்டு, சர்தார் வெளியாகி ஓராண்டு, தளபதி 68 படத்தின் அறிவிப்பு, என் பிறந்தநாள் எப்போதும் ஸ்பெஷலான விஷயங்களை கொடுத்து வருகிறது. உங்கள் அனைவரின் வாழ்த்துகளுக்கும் நன்றி”  இவ்வாறு அவர் வீடியோவில் பேசி உள்ளார். 


லைலா முன்னனி நடிகையாக இருந்த போது அந்த சமயத்தில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்து வந்த பிரசாந்த், விக்ரம், அஜித், சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துவிட்டார். ஆனால், விஜய்யுடன் நடிக்கவில்லை. விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடித்த பூவே உனக்காக திரைப்படம் விஜய்க்கு வெற்றிப்படமாக அமைந்த நிலையில்,  விக்ரமன் மீண்டும் விஜயை வைத்து ஒரு காதல் படத்தை இயக்க முடிவு செய்து ‘உன்னை நினைத்து’ என்ற ஒரு காதல் ஸ்க்ரிப்டை தயார் செய்தார். 


இந்த படத்தில் விஜய் நடிக்க ஒப்புக் கொண்ட நிலையில் படப்பிடிப்பும் ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. படத்தின் படபிடிப்பு ஆரம்பித்து ஓரிரு நாளில் படத்தில் இருந்து விஜய் விலகியதாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர் படத்தில்  நடிகர் சூர்யா கமிட் ஆகி நடித்தார். நந்தா திரைப்படத்திற்கு பின்னர் சூர்யாவிற்கு ஒரு மாபெரும் வெற்றிப்படமாக இது அமைந்தது. 


உன்னை நினைத்து படத்தில் லைலா விஜயுடன் சேர்ந்து நடிக்க முடியாமல் போன நிலையில், தற்போது தளபதி 68 படத்தின் மூலம் மீண்டும் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர். தளபதி 68 பூஜையின் போது லைலா-விஜய் எடுத்துக் கொண்ட க்யூட் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. இந்த படத்தில் லைலா என்ன ரோலில் நடிக்கின்றார் உள்ளிட்ட தகவல்கள் பின்னர் வெளியாகும். 


மேலும் படிக்க


CM M.K.Stalin Tweet: ’’நடிப்பு சுதேசிகள்தான் இந்த கோட்சே கூட்டம்’.. ஆளுநரை மறைமுகமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்!


Pak vs Afg: அன்பு வேணுமா இருக்கு, வெற்றி வேணுமா இருக்கு: இரு அணிகளையும் கொண்டாடிய சென்னை ரசிகர்கள்!