நடிகர் விஜய் நடிப்பில் உருவாகவுள்ள 67வது படம் குறித்த புதிய தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள நடிகர் விஜய் பீஸ்ட் படத்திற்கு பிறகு வாரிசு படத்தில் நடித்து வருகிறார். வம்சி இயக்கும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது. குடும்ப கதையாகி உருவாகி வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தெலுங்கின் மிகப்பெரிய தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரிக்கிறார்.
இந்தப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே விஜய் ரசிகர்கள் அனைவரும் வாரிசு படத்தை விட விஜய் நடிக்கும் 67வது படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் இணைவது உறுதியாகியுள்ள நிலையில் நாளொரு வண்ணம் படம் குறித்து புதிது புதிதாக அப்டேட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித்குமார் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும், அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், பட வேலைகளில் கவனம் கவனம் செலுத்த சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் இருந்து லோகேஷ் கனகராஜ் விலகினார். மேலும் மன்சூர் அலிகானை கமிட் செய்ய இருப்பதாக லோகேஷ் தெரிவித்த நிலையில் விஜய்க்கு 6 வில்லன்கள் இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தளபதி 67 குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விஜய்யின் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகவுள்ளதாகவும், இந்த படத்தில் பாடல்கள் இல்லாமல் வெறும் தீம் பாடல் மட்டுமே இடம் பெறும் எனவும் கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்