தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் மிக ஆவலாக காத்திருக்கும் நிலையில், தற்போது லோகேஷ் கனகராஜின் புகைப்படம் ஒன்று சமூகஅலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வெளியான அந்த புகைப்படத்தில் தளபதி 67 திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித் குமார் மற்றும் நடிகர் விஜயின் மேலாளர் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.



தளபதி விஜய் திரைப்படங்களுக்கு எப்பொழுதுமே எதிர்பார்ப்பு அதிகம்…திரைக்கு வருவதற்கு முன்பே பெருமளவில் கொண்டாடப்படும் படங்கள் தளபதி விஜய்யின் திரைப்படங்கள். தற்போது வாரிசு திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் இருக்கும் தளபதி விஜய், அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படம் தளபதி 67. பெயர் வைக்கப்படாத இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். இந்த திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே வானவில் உயர்ந்து உள்ளது. நான்கு படங்களில் தனது திறமையை மொத்த திரையுலகிற்கும் நிரூபித்துக் காட்டியவர் லோகேஷ் கனகராஜ். 


தளபதி 67:






செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையமைக்க உள்ளார் என்றும்; நிவின் பாலி, சஞ்சய் தத், விஷால், மன்சூர் அலி கான், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர் என்றும் இது குறித்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன. 






லோகேஷிற்கு மிகவும் பிடித்தமான நடிகர் மன்சூர் அலிகான் இந்தப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். முன்னதாக  ‘கைதி’ ‘மாஸ்டர்’ ‘விக்ரம்’ உள்ளிட்ட படங்களில் இணை கதாசிரியராக பணியாற்றிய ரத்னகுமார் இந்தப்படத்திலும் லோகேஷூடன் இணைந்து பணியாற்றுகிரார். இந்த நிலையில் இந்த கூட்டணியுடன் இயக்குநர் தீரஜ் வைத்தியும் இணைந்து பணியாற்றுகிறார். 


தளபதி 67 இணையும் கமல்ஹாசன் :






மேலும் ஒரு இன்டெரெஸ்ட்டிங் தகவல் என்னவென்றால் உலகநாயகன் கமல்ஹாசனை 'தளபதி 67' படத்தில் ஒரு பவர்ஃபுல் கேரக்டரில் நடிப்பதற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவரை அணுகியுள்ளார் என்பது தான். இந்த தகவல் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இருவருக்கும் இருக்கும் நட்பு விக்ரம் திரைப்படம் மூலம் பலப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த தகவல் உண்மையாகவும் இருக்க வாய்ப்புகள் உள்ளன எனவும் கூறப்படுகிறது. இது உண்மையானால் தமிழ் சினிமாவின் இரண்டு ஸ்டார் ஹீரோக்கள் முதல் முறையாக இணையும் திரைப்படம் இதுவாக இருக்கும்.